மதுக்கடைகளில் பீர் விலை உயர்வு.. குடிமகன்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளில் பீர் விலை உயர்வு ரூபாய் 10 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மது குடிப்பவர்களிடையே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுக்க இருக்கும் டாஸ்மாக் கடைகள்தான் அரசு வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு வருடமும் 20 ஆயிரம் கோடி வரை இதன் மூலம் வருமானம் வருகிறது.

Beer price rises in TASMAC

பண்டிகை நாட்களில் டார்கெட் வைத்து வருமானம் செயப்படுகிறது. ஆனால் உச்சநீதி மன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட ஆணையிட்டதால் தமிழக அரசின் வருமானம் குறைந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒவ்வொரு மதுபான வகைகளின் விலையும் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் மது வகைகளின் விலை அதிகமாக்கப்பட்டுள்ளது.

தற்போது பீர் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. டாஸ்மாக் வருவாய் இழப்பை சரிகட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Beer price rises in TASMAC after huge loss in income. The price of beer has raised 10 rupees.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X