தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர் என்பதா- பாரதிராஜா நறுக்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினியை கடுமையாக விமர்சிக்கும் இயக்குனர் பாரதிராஜா- வீடியோ

  சென்னை: தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர்கள் என்று கூறுவதா என்று பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  ஐபிஎல் போட்டிகளின் போது சென்னையில் போலீஸார் தாக்கப்பட்ட சம்பவம் வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் வக்காலத்து வாங்கினார். ஆனால் அதே போலீஸாரால் திருப்பூரில் பெண்ணின் கன்னத்தில் டிஎஸ்பி அறைந்த சம்பவம், திருச்சி உஷா உயிரிழந்த சம்பவம், காஷ்மீர் சிறுமி கொலை உள்ளிட்டவைகளுக்கு வாய்த்திறக்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

  Bharathiraja says that Rajini is living luxurious life in Tamils blood

  இதுகுறித்து பன்னாட்டுத் திரைப்பட பயிற்சிப் பட்டறை சார்பில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், காவிரி பிரச்சினை குறித்து தற்போது பேசும் ரஜினிகாந்த இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்காதது ஏன்.

  சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன்தான். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியை தடைப்படுத்த செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம். நீங்கள் எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.

  பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லாவிட்டால் எங்கள் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று வருத்தத்துடன் கையெழுத்திட்டு பாரதிராஜா அறிக்கையை அனுப்பியுள்ளார்.

  இந்த பன்னாட்டுத் திரைப்பட பயிற்சிப் பட்டறையை ரஜினிகாந்த்தான் துவக்கி வைத்தார். இந்த நிலையில் அவரது அரசியல் வருகையை விரும்பாத பாரதிராஜா இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Bharathiraja says that Rajini is living luxurious life in Tamilan's blood and he is saying us terrors.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற