நடிகர் சரத்குமாரை கட்சியோடு வளைத்துப் போடுவதில் பாஜக படுமும்முரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான நடிகர் சரத்குமாரை கட்சியோடு வளைத்துப் போடுவதற்கு பாஜக மும்முரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சரத்குமார் திமுக, அதிமுக என கட்சிகள் மாறிய நிலையில் சமத்துவ மக்கள் கட்சி என தனிக்கட்சியை நடத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் ஒவ்வொரு அணியையும் மாறி மாறி ஆதரித்தார் சரத்குமார்.

ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு

ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது திடீரென தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து சரத்குமார் வீடு, அவரது மனைவி ராதிகாவின் ரேடான் நிறுவனம் ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

ஆக.27-ல் முடிவு

ஆக.27-ல் முடிவு

இந்நிலையில் ஆகஸ்ட் 27-ந் தேதி சேலம் மாநாட்டில் கட்சி வளர்ச்சிக்காக மிக முக்கிய முடிவு எடுக்கப்படும் என சரத்குமார் அறிவித்துள்ளார். இதனிடையே சரத்குமாரை வளைத்துப் போடுவதில் பாஜக படு மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நோ சொன்ன ரஜினி

நோ சொன்ன ரஜினி

நடிகர் ரஜினிக்கு முதலில் வலைவிரித்துப் பார்த்தது பாஜக. அவரோ தனிக்கட்சி தொடங்குகிறேன்... பின்னர் கூட்டணி குறித்து பார்க்கலாம் என பாஜகவிடம் தெளிவாக கூறிவிட்டார்.

Presidential Election 2017: Ram Nath Kovind Vs Meira Kumar Voting Today-Oneindia Tamil
சரத்குமாருடன் பேச்சுவார்த்தை

சரத்குமாருடன் பேச்சுவார்த்தை

இதையடுத்து சரத்குமாருக்கு குறிவைத்துள்ளது பாஜக. சமத்துவ மக்கள் கட்சியுடன் சரத்குமார் ஐக்கியமாவதையே பாஜகவும் விரும்புகிறதாம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that Actor and Samathuva Makkal Katchi leader Sarathkumar will be join BJP.
Please Wait while comments are loading...