அதிமுக உடைஞ்சதுக்கு நாங்களா காரணம்?.. சீறும் தமிழிசை சௌந்தரராஜன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக வீண் வதந்தி பரப்பப்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பிளவுக்கு பாஜக தான் காரணம் என்று நமது எம்ஜிஆர் நாளிதழில் நையாண்டி கவிதை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 BJP is not splitting ADMK says Tamizhisai

அதன் விவரங்கள்:

அதிமுக பிளவுக்கும், இணைப்புக்கும் பாஜகவை காரணம் என சொல்லக்கூடாது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது மக்கள் நலனுக்காகத் தானே தவிர அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அதிமுகவில் இரட்டையாக செயல்படுபவர்கள் இணைந்தாலே இரட்டை இலை கிடைக்கும்.

தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுவதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவேன் என்று சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஸ்டாலினுக்கே நம்பிக்கை இல்லை. ஸ்டாலின் சட்டத்தை காப்பாற்றுவாரா அல்லது சட்டையை கிழித்து வெளியே வருவாரா என்று மக்கள் காத்திருக்கின்றனர், என்று தமிழிசை கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamizhisai soundar rajan says that BJP is not behind the differnece of ADMK factions and also not even the merger.
Please Wait while comments are loading...