For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகும் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம்?

By Mayura Akilan
|

வேலூர்: வேலூர் தொகுதியில் வேட்பாளராக பாஜக சார்பில் புதிய நீதிக்கட்சியின் சண்முகம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தென் சென்னை, வேலூர், கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கன்னியா குமரி, தஞ்சாவூர் ஆகிய 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடு கிறது. இதில் 6 தொகுதிகளுக் கான வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய இரு தொகுதிகளுக்கான வேட்பாளர் களை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

BJP leaders vying for Vellore

பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தஞ்சை, வேலூர் தொகுதிகளுக்கு கடும் போட்டி இருக்கிறது. காரணம் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் கணவருக்கு வேலூர் சொந்த ஊர் என்பதால் அவரும் தமிழிசை சௌந்தர்ராஜனும் வேலூர் தொகுதியை கேட்டுள்ளனர்.

பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இவர்களில் ஒருவருக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

முதலில் தஞ்சை தொகுதிக்கு மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தின் பெயர்தான் முதலில் முடிவானது. மாநிலத் துணைத் தலைவரும் சீனியருமான எம்.எஸ்.ராமலிங்கமும் தஞ்சையை கேட்பதால் அங்கேயும் வேட்பா ளரை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. எனினும். 2 தொகுதி களுக்கும் இன்று மாலை அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிடுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேலூரில் அதிமுக சார்பில் செங்குட்டுவன், காங்கிரஸ் சார்பில் விஜய் இளஞ் செழியன், திமுக கூட்டணி சார்பில் அப்துல்ரகுமான் ஆகியோர் வேட் பாளர்களாக அறிவிக்கப்பட்டுள் ளனர். இந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர், தஞ்சாவூர் தொகுதிகளில் பாஜக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை. பாஜக நிர்வாகிகள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் பாஜக கூட்டணி யில் உள்ள புதிய நீதிக்கட்சி தலை வர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் வேலூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் வேட்பாளர் தேர்வு பட்டியலை தமிழக பாஜகவினர் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த தொகுதிக்கு ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said the party is unable to decide on the nominee for the Vellore constituency as two senior women leaders - Tamilisai Soundarajan and Vanathi Srinivasan - are vying for a berth. While the two leaders are fighting it out within the BJP, a source said A.C. Shanmugam, chief of the New Justice Party, which was one of the first outfits to declare its support to the BJP, is also vying to bag the Vellore constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X