For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய் வீட்டில் ரெய்டு.. எச். ராஜாவுக்கு செம ஹேப்பி போல.. வீரராச்சே என்று சீண்டி ஒரு டிவீட்!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில் எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என கூறிய பிறகும் டிவிட்டரில் வம்பிழுத்து ரசிகர்களிடம் செமையாக வாங்கிக் கட்டி கொண்டார் எச் ராஜா.

பாஜக தேசிய செயலாளராக உள்ள எச் ராஜா சர்கார் படத்தில் விஜய் ஜிஎஸ்டி குறித்து வசனம் பேசியதிலிருந்து அவர் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார். அவரை மத ரீதியிலாக விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் அவரது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து ட்விட்டரில் போட்டு செமையாக வாங்கிக் கட்டி கொண்டார்.

இந்த நிலையில் நடிகர் விஜயை அவ்வப்போது சீண்டி கொண்டிருந்தார். இப்போது விஜய் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

அன்புச் செழியனிடமிருந்து ரூ.77 கோடி பறிமுதல்.. ரூ. 300 கோடிக்கு வரி ஏய்ப்பு.. ஐடி அறிக்கை அன்புச் செழியனிடமிருந்து ரூ.77 கோடி பறிமுதல்.. ரூ. 300 கோடிக்கு வரி ஏய்ப்பு.. ஐடி அறிக்கை

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

நேற்று மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அப்படியே சென்னைக்கு அழைத்து வந்தனர் வருமான வரித் துறை அதிகாரிகள். பின்னர் ஈசிஆர் சாலையில் உள்ள அவரது பனையூர் வீட்டில் நேற்று முதல் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு இன்றும் தொடர்ந்தது. அது போல் பிகில் படத்தை தயாரித்த கல்பாத்தியின் ஏஜிஎஸ் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது.

அன்புச் செழியன்

அன்புச் செழியன்

பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு கட்டுக் கட்டாக ரூ 65 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் நகை, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அன்புச் செழியனின் வீட்டிலும் ஏஜிஎஸ் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது.

சர்கார்

சர்கார்

நடிகர் விஜய் வருமான வரித் துறையை சரியாக கட்டி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் எச் ராஜா மீண்டும் விஜயை வம்புழுக்கு இழுத்துள்ளார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து ஒரு நாளேட்டின் செய்தியை மேற்கோள்காட்டி தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில் சர்கார் படத்தில் விஜய் இலவச டிவியை வீசி எறிவது போல காட்சிகள் படமாக்கப்பட்டதையும் சுட்டிக் கொட்டியுள்ளார்.

நேர்மை

அவர் தனது ட்வீட்டில் இலவச டிவியை வீசி எறிந்து படமெடுத்த வீரர் ஆயிற்றே. நேர்மை? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை நடந்த ரெய்டுகளில் விஜய் வீட்டிலிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அவர் முறைகேடு செய்ததாக எந்த தகவலும் இல்லை. ஆனால் பணம், ஆவணங்கள் சிக்கியது எல்லாமே அன்புச் செழியன் வீடு மற்றும் ஏஜிஎஸ் குழுமத்தில்தான்.. இதை எச். ராஜா சொல்லாமல் விட்டுட்டாரே.. இதெல்லாம் சரி.. ரஜினிகாந்த் வட்டிக்கு விட்டதாக வருமான வரித்துறையில் ஆவணம் சமர்ப்பித்தது தொடர்பாகவும் எச். ராஜா கருத்து ஏதும் சொல்லாமல் விஜயின் நேர்மையை மட்டும் குறி வைத்து கேள்வி எழுப்புவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

English summary
BJP National Secretary H.Raja criticises IT raid in Actor Vijay's house despite the IT officials found nothing in his house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X