For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வால்க தமில்.. தமிழகத்திலிருந்து கொண்டு இதை விட தமிழை யாராலும் கேவலப்படுத்த முடியாது சேகர்ஜி!

Google Oneindia Tamil News

சென்னை: 5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் கடும் அதிருப்தியுடன் சாபமிட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைப்படி 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

BJPs S.VE.Shekher opposes to withdraw 5,8th Public exams

இதனையடுத்து சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று 5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை அனைத்து கட்சியினரும் ஆசிரியர் சங்கங்களும் வரவேற்றுள்ளனர். ஆனால் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகர் பொதுத்தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

என்னதான் நடக்குது எஸ்ஆர்எம்மில்? துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மோதி கொண்ட மாணவர்கள்.. பொதுமக்கள் ஷாக்என்னதான் நடக்குது எஸ்ஆர்எம்மில்? துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மோதி கொண்ட மாணவர்கள்.. பொதுமக்கள் ஷாக்

இது தொடர்பாக எஸ்.வி. சேகர் தமது ட்விட்டர் பக்கத்தில், 5வது 8 வது பொதுத்தேர்வு ரத்து கல்வித்துறை உத்தரவு. அப்படியே 10 வது 12 வது தேர்வையும் ரத்து பண்ணிடுங்க. பசங்க விளங்கிடுவாங்க. வால்க தமில். என பதிவிட்டிருக்கிறார்.

BJPs S.VE.Shekher opposes to withdraw 5,8th Public exams

எஸ்.வி.சேகரின் இப்பதிவுக்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. @Power79646739 என்ற நெட்டிசன், இந்த பிரச்சினை நாம் நினைப்பதை விட மிகப்பெரியது. 5, 8 படிக்கும் பிள்ளைகள், டீன் ஏஜ் வராத, அலசி ஆராயும் திறன் முழுமை பெறாத குழந்தைகள். இந்த தேர்வுமுறை, ஆசிரியர் மற்றும் பெற்றோர் கொடுக்கும், மன அழுத்தம் அனைத்தும் சேர்ந்து அவர்களுக்கு கல்வி மேல் ஒரு அச்சம்,வெறுப்பு ஏற்படுத்திவிடும் என குறிப்பிட்டிருக்கிறார்.

@venkhats என்பவர், சார், 5 மற்றும் 8 வது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது கொடூரம். அதையும் 10 மற்றும் 12 உடன் ஒப்பிடாதீர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். @karursami என்ற ட்வீட்டிஸ்ட் திரு சேகர், தங்களின் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஒரு பண்பட்ட மொழியை ஒரு மூன்றாம் தர நபர் போல் எழுதுவது பண்பல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க?

@pachaiperumal23 என்ற பதிவர், உங்கள் கருத்தை சொல்லுங்கள் சரி.. உங்களுக்கு அதற்கான சுதந்திரம் உண்டு. அதென்ன வால்க தமில்...? இது மிகவும் தவறு சார். தமிழ்மொழியை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
BJP's Actor S.VE.Shekher has opposed to withdraw the 5,8th Public exams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X