For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் விடாமல் பெய்யும் மழை.. நனைந்தன மனங்கள்.. கரைந்தன செங்கல்கள்.. விலை விர்விர்!

கோவையில் மழை காரணமாக செங்கல் உற்பத்தி தொழில் முடங்கியுள்ளது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    முடங்கியது செங்கல் உற்பத்தி தொழில்..வீடியோ

    கோவை: கோவையில் விட்டு விட்டு பெய்யும் மழையினால் செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

    கோவை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளான சின்ன தடாகம், கணுவாய், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தினசரி சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    bricks industry affects due to rain in kovai

    இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தடாகம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கோவையில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல் உற்பத்திக்காக இருப்பு வைக்கப்பட்ட மண் முழுவதும் சகதியாக மாறி உள்ளது.

    மழை காரணமாக செங்கல் உற்பத்தி முற்றிலுமாக முடங்கி உள்ளது. உற்பத்தி முடங்கி உள்ளதால் செங்கல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விலையும் அதிகரித்து உள்ளது. உற்பத்தி நிறுத்தத்தால் இந்த தொழிலை நம்பியுள்ள செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    The brick industry has been affected due to rain in Coimbatore. The price of bricks has also increased due to rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X