திருமணம் முடிந்தது... முதலிரவில் புதுமாப்பிள்ளை திடீர் எஸ்கேப்... நெல்லையில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருமணமான முதல் இரவிலேயே மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகே செட்டிமேடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோசப். இவர் சென்டரிங் தொழில் செய்து வருவதாகத் கூறப்படுகிறது. இவருக்கும் வி.கே.புரம் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

Bride groom Escaped in Nellai

அதனைத் தொடர்ந்து திருமணம் நடந்த அன்று மாலை மாப்பிள்ளை வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இரு வீட்டாரின் திரளான உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமண நிகழ்வின் அனைத்து சடங்குகளும் முடிந்த நிலையில் முதல் இரவுக்காக தயாரான நிலையில் மாப்பிள்ளையைத் தேடிய போது, அவர் மாயமானது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வீட்டார் தொடர்ந்து பல இடங்களில் மாப்பிளையைத் தேடினர். ஆனால் மாப்பிள்ளை இறுதிவரையில் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாப்பிள்ளையின் தந்தை அந்தோணி சவரிமுத்து விகேபுரம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சையது உசேன் வழக்கு பதிவு செய்து மாயமான அந்தோணி ஜோசப்பை தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bride groom Escaped in Nellai, Police hunting on.
Please Wait while comments are loading...