எங்களுக்கு "பட்டை நாமம்" போடவே எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் டைம் ... ப.சிதம்பரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாஜவுக்காக அமித் ஷா வைத்திருக்கும் 3 அஸ்திரங்கள்!- வீடியோ

  சென்னை: எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்ததே அவர்கள் பெற்ற 104 இடங்களை 111-ஆக மாற்றுவதற்குத்தான் என்று ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

  கர்நாடக தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இதனால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதுபோல் பாஜகவும் 104 இடங்களை வைத்துக் கொண்டு பெரும்பான்மை என்று கூறி ஆட்சி அமைக்க கோரியது.

  ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், மற்ற கட்சிகளுடன் கைகோத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தது.

  எதிர்ப்பு

  எதிர்ப்பு

  இந்நிலையில் இரு கட்சிகளும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடினர்.

  15 நாட்கள் காலஅவகாசம்

  15 நாட்கள் காலஅவகாசம்

  இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், முதல்வராக பொறுப்பேற்கும் எடியூரப்பாவுக்கு தடை விதிக்க முடியாது என்று கைவிரித்து விட்டது. இதையடுத்து எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதே சமயம் பெரும்பான்மையை நிரூபிக்க அவர் 15 நாட்கள் காலஅவகாசத்தையும் பெற்றார்.

  டுவிட்டரில் கண்டனம்

  இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் சட்டசபையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எடியூரப்பாவை கண்டித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  பதவியேற்க மாட்டேன்

  பதவியேற்க மாட்டேன்

  அதில் அவர் கூறுகையில் கர்நாடக ஆளுனர் திரு எடியூரப்பாவிற்கு அழைப்பு: 15 நாட்களில் சிறுபான்மையை பெரும்பான்மையாக மாற்றிக் காட்டுங்கள். இது புதிய ரசவாதம். 15 நாள் அவகாசம்: 104 என்பதை 111 ஆக மாற்ற திரு எடியூரப்பாவிற்கு அழைப்பு. இது உயர் கணிதம்! என்று கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்துக்கு எனது சல்யூட். நான் எடியூரப்பாவாக இருந்திருந்தால் நாளை வழக்கு விசாரணை நடைபெறும் 10.30 மணி வரை பதவியேற்றிருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  P.Chidambaram tweet that Governor invites Mr Yeddyurappa to manufacture a majority in 15 days. Governor gives Mr Yeddyurappa 15 days to convert the number 104 into 111.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற