For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பால்பவுடரில் வண்டு கிடந்ததால் நெல்லையில் பரபரப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே கடையில் விற்கப்பட்ட குழந்தைளுக்கான பால் பவுடரில் வண்டு கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு மருத்துவர் தெருவை சேர்ந்தவர் தனராஜ். இவர் அங்கு எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். இவர் இரவு களக்காட்டில் உள்ள ஒரு கடையில் குழந்தைகளுக்கான பால்பவுடர் வாங்கினார். வீடடுக்கு சென்று அவர் டப்பாவை பிரித்து பார்த்த போது அதில் வண்டுகள் கிடந்தன.

bug in a milk powder packet in Nellai

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த பால் டப்பா மும்பை ஓர்லியை சேர்ந்த ரேப்டகாஸ் பிரெட் அன்ட் கோ நிறுவனம் தயாரித்துள்ளது.

6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கான அந்த பால் பவுடர் டப்பாவில் தயாரிப்பு தேதி 04.2015 என்றும் காலாவதி தேதி 10.2015 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு பேக்கிங் செய்யப்பட்ட டப்பாவில் எப்படி வண்டு வந்தது என்பது தெரியவில்லை.

ஏற்கனவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ்சில் மோனோ சோடியம் குளூட்டோமேட் ரசாயன பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸூக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பச்சிளங்குழந்தைகளுக்கான பால் பவுடரிலும் வண்டு கிடந்தது களக்காடு பகுதியில் பொது மக்களிடையே அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
Small bugs found in a milk powder packet in Nellai. people have feared and doubt about the packing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X