ஜெயலலிதா கைரேகை விவகாரம்.. மருத்துவர் பாலாஜியின் விளக்கத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.கைரேகை சர்ச்சை...ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி விளக்கம்- வீடியோ

  சென்னை: ஜெயலலிதா கைரேகை குறித்த மருத்துவர் பாலாஜியின் விளக்கத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

  ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.

  Can't speak in DR. Balaji's statement on Jayalalitha's fingerprint - Radhakrishnan

  இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழக அரசால் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

  இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. இது தொடர்பாக மருத்துவர் பாலாஜியிடம் விசாரிக்கப்பட்டது.

  அவர் விசாரணையில் ''ஜெயலலிதாவின் கைரேகையை பெற யாரும் எழுத்துப்பூர்வ ஆவணம் கொடுக்கவில்லை. முதல்வர், தலைமை செயலாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஆவணம் வரவில்லை'' என்றார்.

  தற்போது மருத்துவர் பாலாஜியின் விளக்கத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். பாலாஜி கூறியதை கேட்ட பிறகே விளக்கம் அளிக்க முடியும் என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TN government announces that Enquiry commission under Retired Judge Arumugasamy appointed to probe Jayalalitha's death. Now 6 month extention for Inquiry commission in Jayalalitha death. In commission DR. Balaji says no one has gave proper letter to get Jayalalitha's fingerprint. Now Radhakrishnan says that he can't speak in DR. Balaji's statement on Jayalalitha's fingerprint.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற