சென்னை- வங்கதேசம் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துறைமுகத்திலிருந்து வங்கதேசத்திற்கு சரக்கு கப்பல் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

சென்னை - வங்கதேசம் இடையே இன்று முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணெலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.

Cargo shipments between Chennai and Bangladesh started today

சென்னை துறைமுகத்திலிருந்து லாரிகள் மூலமே சரக்குகள் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சென்னை துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி, சென்னை துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள மோங்ளா துறைமுகத்துக்கு அசோக் லைலேன்ட் நிறுவனம் 185 லாரிகளை 'ரோரோ' கடலோர கப்பல்கள் மூலம் இன்று முதல் முறையாக அனுப்ப உள்ளது.

அசோக் லேலன்ட் நிறுவனம் இதுவரை லாரிகளை வங்காளதேசத்துக்கு சாலை வழியாக அனுப்பி வந்தது. இதனை கடல் வழியாக அனுப்புவதால் பயண நேரம் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சாலை போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற அண்டைநாடுகளுக்கும் சரக்கு கப்பல் போக்குவரத்தை அதிகரிக்க தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cargo shipments between Chennai and Bangladesh started today. This was done by Union Minister Nitin Gadkari through video conferrncing.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற