திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவிரி வரைவு திட்டம் இருக்கும் - ராஜா கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை : திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கான வரைவுத் திட்டம் இருக்கும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே, கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி இரண்டு முறை வழக்குத் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த முறை வரைவுத் திட்டம் சமர்பிக்கப்படும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Central Cauvery draft Plan will Destroy Dravidian Politics says H Raja

அதேபோல, இந்த முறை நிச்சயம் காவிரி நீருக்கான வரைவு அறிக்கைத் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். இதனால், இந்த வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், திராவிட ஆட்சிகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசின் வரைவுத் திட்டம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாளை சமர்பிக்கப்படும் காவிரி வரைவுத் திட்டத்தின் மூலம் டெல்டா விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central Cauvery draft Plan will Destroy Dravidian Politics says H Raja. BJP National Secretary H Raja Says that Central Government Draft plan will be useful to TN Farmers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற