மத்திய அரசு டெல்டாவில் நாசகார அழிவுத் திட்டங்களை திணிக்கிறது.. வேல்முருகன் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு டெல்டாவில் நாசகார அழிவுத் திட்டங்களை திணிக்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரிக்காக தமிழகம் ஒற்றுமையாக போராடி வருகிறது என்றார்.

Central government has imposed destructive plans in Delta: Velmurugan

தமிழகத்தில் மாபெரும் மக்கள் புரட்சி நடைபெற்று வருகிறது என்றும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

டெல்டாவில் நாசகார அழிவுத் திட்டங்களை மத்திய அரசு திணிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு திணிப்பு, இடஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றும் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை அனுமதிக்க முடியாது என வேல்முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வரும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் பறக்கவிடப்படும் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Velmurugan said that the central government has imposed destructive plans in Delta.Velmurugan has categorically stated that IPL matches in Chennai can not be allowed till the Cauvery management board is set up.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற