2015 பீதியில் மீண்டும் ஈக்காட்டுதாங்கல்- ஆர்ப்பரிக்கும் அடையாறு- மூழ்கும் நிலையில் தரைப்பாலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ

  சென்னை: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சென்னை காசிதிரையரங்கம் அருகே உள்ள தரைப்பாலம் எந்த நிமிடத்திலும் ஆற்று வெள்ளத்தால் மூழ்கும் நிலைமை உள்ளது.

  2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நீர் பெருமளவு திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. சென்னை ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை உள்ளிட்ட தென்சென்னை பகுதிகள் மூழ்கிப் போகின.

  Chennai Adyar river getting flooded

  3 மாடி உயரத்துக்கு வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்தது. மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய 2015-ம் ஆண்டு நிலைமை மீண்டும் உருவாகுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

  சென்னை ஈக்காட்டு தாங்கல் பகுதியில் இப்போதே அடையாறு ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. காசி திரையரங்கம் அருகே உள்ள தரைப்பாலம் எந்த நேரத்திலும் வெள்ளத்தில் மூழ்கும் என்பதால் அதில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  அடையாறில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் இந்த நிலையில் திடீரென ஆகாயத்தாமரைகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ஆற்றின் கரையோரம் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai adyar river getting flooded due to the heavy rain.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற