For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா நான் பத்திரமா இருக்கேன்…. குண்டு வெடிப்புக்குப் பின் வீட்டிற்கு போன் செய்த மாணவர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தி ரயிலில் பயணம் செய்த பயணிகளும், அவர்களின் உறவினர்களும் குண்டு வெடிப்பு குறித்து தங்களின் அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

கிறைஸ்ட் பல்கலைக்கழக மாணவர் அர்காதீப் பானர்ஜி குண்டு வெடிப்புக்குள்ளான கவுகாத்தி ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் குண்டு வெடித்த போது ஏற்பட்ட சம்பவங்களை விவரித்துள்ளார்.

எஸ்-5 பெட்டியில் பயணம்

எஸ்-5 பெட்டியில் பயணம்

நான் எஸ்-5 ரயில் பெட்டியில் இருந்தேன். அப்போது திடீரென பலத்த சத்தம் கேட்டது.

பயணிகள் ஓட்டம்

பயணிகள் ஓட்டம்

திடீரென வெடிச்சத்தம் கேட்டது. மக்கள் பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். குண்டு வெடிப்பு நடந்துள்ளது என புரிந்து கொண்டேன்.

போலீசார் உதவவில்லை

போலீசார் உதவவில்லை

உடனடியாக எஸ்-5 ரயில் பெட்டியில் இருந்து வெளியேறினேன். மக்கள் குழப்பத்துடன் ஓடிக்கொண்டிருக்க அங்கே இருந்த போலீசார் யாரும் எங்களுக்கு உதவ முன் வரவில்லை.

அம்மாவுக்கு போன்

அம்மாவுக்கு போன்

பின்னர் நான் என் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தேன்" என்றார்.

கேஸ் சிலிண்டர் வெடிச்சத்தம்

கேஸ் சிலிண்டர் வெடிச்சத்தம்

சிலிண்டர் வெடிப்பது போல கேட்டதாக எஸ் 3 பெட்டியில் பயணம் செய்த மற்றொரு பயணி கூறியுள்ளார்.

காயத்தோடு பயணிகள்

காயத்தோடு பயணிகள்

சென்னை வந்த உடன் படுக்கையில் இருந்து நான் எழுந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் காலை 7.15 மணியானது... திடீரென்று அருகில் இருந்த பெட்டியில் இருந்து டமால் என்ற சத்தம் கேட்டது.

ஒரே குழப்பம்

ஒரே குழப்பம்

மக்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள். பிறகுதான் எஸ் 4, எஸ் 5 பெட்டியில் நான் குண்டு வெடித்ததை உணர்ந்தேன். உடனே நான் பெட்டியை விட்டு அவரசமாக வெளியேறினேன்.

காயத்தோடு பயணிகள்

காயத்தோடு பயணிகள்

குண்டு வெடித்த பெட்டியில் சிலர் காயத்தோடு விழுந்து கிடந்ததை கண்டேன். காயத்தின் வலியில் அவர்கள் அலறிக்கொண்டிருந்தனர் என்று கூறியுள்ளார் அந்த பயணி.

English summary
A passenger, who was travelling by the S3 coach, narrating his experience, said, "I was awake and resting on my berth. At about 7.15 am, we heard some sound from the next coach. I came out of the coach and saw what had happened in S4 and S5 coaches". Most passengers, who were panic-stricken, also rushed out, he said. "We saw three to four injured persons writhing in pain."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X