சென்னை கல்லூரி மாணவி கொலை வழக்கில் திருப்பம்.. போலீசில் அஸ்வினி கொடுத்த கடிதத்தில் பரபர தகவல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அஸ்வினி கொடுத்த புகார் கடித்ததால் பரபரப்பு...வீடியோ

  சென்னை: சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அவர் போலீசில் எழுதி கொடுத்த கடிதம்.

  சென்னை மதுரவாயல் ஆலபாக்கம் தனலட்சுமிநகரை சேர்ந்த மோகன், சங்கரி ஆகியோரின் மகள் அஸ்வினி (19). மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனது தாய் சங்கரியுடன் அஸ்வினி வசித்து வந்தார்.

  கே.கே நகரில் உள்ள மீனாட்சி கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் அஸ்வினி. இவரது வீடு அருகே அழகேசன் (24) என்ற வாலிபர் வசித்து வந்தார்.

  தண்ணீரில் துளிர்த்த காதல்

  தண்ணீரில் துளிர்த்த காதல்

  சென்னை மாநகராட்சி 143வது வார்டில் சுகாதாரத்துறை ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்த இவர், வீடு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார். அஸ்வினியின் வீட்டிற்கு தண்ணீர் சப்ளை செய்ய சென்றபோது, அழகேசனுக்கும், அஸ்வினிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

  சீறிய சொந்தங்கள்

  சீறிய சொந்தங்கள்

  இருவருமே ஜோடியாக பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். இதையறிந்த சங்கரியும், உறவினர்களும் அஸ்வினியை கண்டித்துள்ளனர். இதனால் அழகேசனுடன் வெளியே சுற்றுவதை அஸ்வினி நிறுத்திக்கொண்டார். செல்போனில் காதல் வளர்ந்தது. ஆனால், அதற்கும் உறவினர்கள் தடை விதித்ததால், வீட்டில் யாருமில்லாத ஒரு நாள் அஸ்வினி வீட்டுக்குள் வந்து, அவரை கட்டாயப்படுத்தி தாலி கட்டியுள்ளார்.

  வீசிய அஸ்வினி

  வீசிய அஸ்வினி

  இதனால் கோபமடைந்த சங்கரி அழகேசனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அஸ்வினியின் பெரியப்பா சம்பத் ஆகியோர், கடந்த பிப்ரவரி 16ம் தேதி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் அழகேசனை எச்சரித்து, விருப்பம் இல்லாத பெண்ணை தொந்தரவு செய்ய கூடாது என எச்சரித்த அஸ்வினியிடமும் புகார் வாங்கியுள்ளனர். மேலும், அழகேசன் கட்டாயமாக கட்டிய தாலியை அங்கேயே கழற்றி அவன் மீது வீசிவிட்டார் அஸ்வினி. இதனால் அழகேசன் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளான்.

  திருப்புமுனை கடிதம்

  திருப்புமுனை கடிதம்

  இந்த நிலையில், அஸ்வினி போலீசில் அளித்த தனது புகார் மனுவில் தானும் அழகேசனும் காதலித்ததாக குறிப்பிட்டுள்ளார். அழகேசன் தனது காதலுக்கு தகுதி இல்லாதவர் என்று தெரிந்து ஒதுங்கியதால் தொல்லை கொடுப்பதாகவும், இனி அவர் என் வாழ்க்கையில் குறுக்கிடக் கூடாது என்று எழுதிக் கொடுத்துள்ளார். இதன் மூலம், அஸ்வினியும், அழகேசனை முதலில் காதலித்தது உறுதியாகியுள்ளது. இந்த கடிதம்தான் புலன்விசாரணையில் போலீசாருக்கு உதவியாக உள்ளதாக கூறப்படுகிறது.

  தண்டனை அவசியம்

  தண்டனை அவசியம்

  அஸ்வினி பள்ளி படித்தபோதும், கல்லூரி படித்தபோதும், அவருக்கு கல்வி கட்டணம் செலுத்த அழகேசன் உதவியதாகவும், அதை சங்கரி பெற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் பரவியுள்ளது. அது உண்மைதானா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், விருப்பம் இல்லாத பெண்ணை கழுத்தறுத்து கொன்ற கயவனுக்கு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai college student Ashwini's murder case gets new twist after a letter which she wrote to the police.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற