மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் கடும் பாதிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆவடி அருகே நேற்று இரவு மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் புறநகர் ரயில்கள் குறைவாக இயக்கப்பட்டன.

Chennai EMU derails

கடந்த 7 மணிநேரமாக இதே நிலைமை நீடிப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் சென்ட்ரலில் இருந்து பழனி, திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai EMU Trains traffic suspended for Seven hours from Tuesday Night due to the EMU coaches derail near Avadi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற