நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய சென்னை ஹைகோர்ட் இடைக்காலத் தடை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய சென்னை ஹைகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. மேலும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.

Chennai high court issued interim ban to arrest Nanchil Sampath

இதனைக் கண்டித்து பாஜகவினர் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் அம்பத்தூர் எஸ்டேட், பம்மல் உள்ளிட்ட இடங்களில் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாஞ்சில் சம்பத் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இதன் காரணமாக நாஞ்சில் சம்பத் தலை மறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தன் மீது தொடரப்பட்ட 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி நாஞ்சில் சம்பத் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய தடை விதித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai high court issued interim ban to arrest Nanchil Sampath. 11 defamation cases have filed on Nanchil sampath.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற