For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மரணம்.. விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராக வேண்டும்.. சசிகலா தரப்பு வலியுறுத்தல்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆஜராக வலியுறுத்துவோம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆஜராக வலியுறுத்துவோம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த கமிஷனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் ஆஜராகி வருகின்றனர்.

இதேபோல் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களும் விசாரணை கமிஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறது. விசாரணை கமிஷனில் அஜராகுபவர்களை சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்து வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை

எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை

இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களை ஆஜர் படுத்த சசிகலா தரப்பு கோரிக்கை வைத்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்களிடம் வியாழக்கிழமை விசாரணையும், வெள்ளிக்கிழமை சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணையும் நடைபெறவுள்ளது.

பல முக்கிய தகவல்கள்

பல முக்கிய தகவல்கள்

இதுதொடர்பாக பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் எய்ம்ஸ் மருத்துவர்களை விசாரணை செய்வதன் மூலம் ஜெயலலிதா மரணம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரிய வரும் என்றார்.

ஓபிஎஸ் ஆஜராக வலியுறுத்தல்

ஓபிஎஸ் ஆஜராக வலியுறுத்தல்

மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார். விசாரணையிலிருந்து விலக்கு கோரிய ஆடிட்டர் குருமூர்த்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குருமூர்த்திக்கு விலக்கு?

குருமூர்த்திக்கு விலக்கு?

விசாரணைக்கு ஆஜராக குருமூர்த்திக்கு விலக்கு அளிக்கப்பட்டால் ஆஜராக உத்தரவிடப்படும் அனைவரும் அந்த நிலையை எடுக்கும் சூழல் ஏற்படும் என ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.

English summary
Sasikala side urging Arumugasami commission Deputy CM OPS should appear in the inquire commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X