இன்றைக்கும் சென்னைக்கு மழையாம்... வானிலை மையம் குளு குளு அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்து வரும் வேளையில் சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Chennai likely to get rain today

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொழுதூரில் 6 செ.மீ. மழையும், பொன்னேரியில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Meteorological department announces that Chennai likely to get rain.
Please Wait while comments are loading...