For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்... சென்னை நிலவரம் எப்படி... வானிலை மையம் அறிவிப்பு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிற இடங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

Chennai meteorological department announces about rainfall

இந்நிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில் வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும்.

அதை தொடர்ந்து அது எந்த திசையில் நகர்கிறது என்று தெரியும். மேலும் தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை லேசான தூறல் மழை பெய்யும் என்றார். நேற்று காலை நிலவரப்படி ஆங்காங்கே பெய்த மழையின் அளவு செ.மீ. அளவில் பின்வருமாறு: கோவிலங்குளம் 7 செ.மீ., செங்கல்பட்டு, விளாத்திகுளம், தாமரைப்பாக்கம் தலா 4 செ.மீ., விரிஞ்சிபுரம், காஞ்சிபுரம், மாமல்லபுரம் தலா 3 செ.மீ., திருக்கோவிலூர், நாமக்கல், கமுதி, வேலூர், மேலூர், விழுப்புரம், திருச்சுழி, உத்தரமேரூர், திண்டிவனம், வந்தவாசி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

English summary
Chennai Meteorological department announces that some of the places in TN gets heavy rainfall and some gets low rainfall. Chennai will get shower rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X