For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

72 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் சென்னை மெட்ரோ ரயில்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு முதல் ரயில் காலை 6 மணிக்கு இயக்கப்படும் எனவும் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே இரவு 10.3க்கு கடைசி ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு காலை 6 மணிக்கு முதல் மெட்ரோ ரயில் புறப்படும். கடைசி மெட்ரோ ரயில் இரவு கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு இரவு 9.40 மணிக்கு புறப்படும். இதே போல் ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டிற்கு காலை 6.03 மணிக்கு புறப்படும். கடைசி ரயில் இரவு 10.03 மணிக்கு புறப்படும்.

Chennai Metro train Max Speed Will be 72KMPH

மொத்தம் 192 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரயிலும் 72 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 நிமிடத்திற்கு ஒரு ரயில் இரு வழித்தடங்களிலும் இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 செகண்டுகள் ரயில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களுமே 2-வது மாடியில் தான் அமைந்துள்ளன. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் எளிதாக ரெயிலில் ஏறுவதற்காக தரைதளத்தில் இருந்து லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்) அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு லிப்டில் 13 நபர்கள் செல்லலாம். மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகளை நிறுத்தும் வசதியும், பார்வையற்றவர்கள் லிப்டை எளிதாக இயக்கும் வண்ணம் பிரெய்லி பொத்தான்களும், தானியங்கி மீட்பு சாதன வசதிகளும் இருக்கின்றன.

English summary
CMRL has been certified to run up to 80 kmph, the train will only clock 72 kmph maximum
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X