For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னைவாசிகளை மெய்சிலிர்க்க வைத்த ராணுவ வீரர்களின் 'வான்' சாகசங்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய ராணுவ வீரர்கள் 8,000 அடி உயரத்தில் இருந்து 30 கிலோ ஆயுதங்களுடன் குதித்து சென்னையில் சாதனை செய்தனர்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் சார்பில் வண்டலூரை அடுத்த காயார் ஏரிப் பகுதியில் விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிக்கும் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சாகச நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப் பிரிவு -மேகதூத், விமானப் படையின் ஆகாஷ் கங்கா படைப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் சாகசம் செய்து காட்டினர். இவற்றைப் பார்க்க ராணுவப் பள்ளியில் பயிற்சி பெறுபவர்கள், ராணுவ அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

ஸ்டேடிக் லைன் ஜம்ப்

ஸ்டேடிக் லைன் ஜம்ப்

அப்போது மாலை சுமார் 4.42 மணிக்கு 1,250 அடி உயரத்தில் இருந்து முதல் வீரர் ஸ்டேடிக் லைன் ஜம்ப் முறையில் குதித்தார். பின்னர் 4.49 மணிக்கு 6 வீரர்களும் 4.54 மணிக்கு ஒரு வீரரும் அதே உயரத்தில் இருந்து குதித்தனர். பின்னர் 5.03 மணிக்கு 6 வீரர்கள் குதித்தனர். வீரர்கள் வெற்றிகரமாக தரையை அடைந்தவுடன் குழுமியிருந்த ராணுவ அதிகாரிகள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

8,000 அடி உயரத்தில்..

8,000 அடி உயரத்தில்..

பின்னர் 5.16 மணிக்கு 8,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து 9 வீரர்கள் பிரீ ஸ்டைல் ஜம்ப் முறையில் குதித்தனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக பாராசூட்டை விரித்துப் பறந்தனர். அதில் சில வீரர்கள் மூவண்ணக் கொடியை ஒத்த பாராசூட்டைப் பயன்படுத்தினர். மற்றவர்கள் இரவு நேரங்களில் எதிரிப்படைகளுக்கு தெரியாமல் ஊடுருவப் பயன்படும் கருப்பு நிற பாராசூட்டை பயன்படுத்தினர்.

அதன் பின்னர் 5.26 மணிக்கு மேலும் 9 வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தனர். அதில் காவி, வெள்ளை, பச்சை நிற பாராசூட்டைப் பயன்படுத்திய 3 வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து தேசியக் கொடி போன்ற தோற்றத்தில் தரையிறங்கினர்.

30 கிலோ ஆயுதங்களுடன்..

30 கிலோ ஆயுதங்களுடன்..

அவர்களுடன் குதித்த மற்ற வீரர்கள் போருக்குச் செல்லும் போது எடுத்துச் செல்லும் 30 கிலோ ஆயுதங்களுடன் தரையை வந்தடைந்தனர்.

சாகசம் செய்தவர்களில் 20 பேர் ராணுவத்தின் மேகதூத் பிரிவைச் சேர்ந்தவர்கள்; 12 பேர் விமானப் படை ஆகாஷ் கங்கா பிரிவைச் சேர்ந்தவர்கள்.

சாகசத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார் பயிற்சி அகாதெமியின் காமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி.சாஹி. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய ராணுவத்தின் திறமையை பறைசாற்றுவதற்காகவும் ராணுவ வீரர்களிடம் சாகச எண்ணத்தை வளர்ப்பதற்காகவும் இது போன்ற சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

தமிழக வீரர் கார்த்திக்

தமிழக வீரர் கார்த்திக்

இந்த சாகசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் மட்டும் கலந்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்ற அந்த வீரர், ஸ்டேடிக் லைன் ஜம்ப் முறையில் விமானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்தார்.

English summary
The Indian Army on Saturday caught the imagination ofChennaities by organizing a special sky-diving demonstration at the Kayar Lake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X