திண்டுக்கல் பெருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க எடப்பாடியார் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பெருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதேபோல் தமிழகத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது.

Chief minister Edappadi palanisami orders to water release in Perundalaru Dam in Dindugul

இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பெருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 20-ம் தேதியில் இருந்து தாடங்குளம் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 844 ஏக்கர் நிலங்கள் பாசானவசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief minister Edappadi palanisami orders to water release in Perundalaru Dam in Dindugul District. Due this 844 acre lands will get benefit in the district.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற