For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களிடம் செல்லுங்கள்.. நமது நன்றிகளைச் சொல்லுங்கள்.. ஜெ. உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுக்கு 37 லோக்சபா தொகுதிகளில் பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்த மக்களுக்கு நன்றி சொல்வதற்கான கூட்டங்களை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நீண்ட நெடிய அறிக்கை ஒன்றையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ளன அந்த அறிக்கை....

அமைதி - வளம் - வளர்ச்சி

அமைதி - வளம் - வளர்ச்சி

கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நல்லாசியோடு, 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில் தமிழகத்தை அழைத்துச் சென்று கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு தனது மூன்று ஆண்டினை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

மக்கள் சேவையே மகேசன் சேவை

மக்கள் சேவையே மகேசன் சேவை

'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதற்கேற்ப, மூன்றே ஆண்டுகளில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை; தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் தொலை நோக்குத் திட்டங்களை; சரித்திரச் சாதனைகளை; மக்கள் போற்றும் மகத்தான நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றிக் காட்டி இருக்கிறது.

மின்வெட்டே இல்லாத மாநிலம்

மின்வெட்டே இல்லாத மாநிலம்

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 4,000 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டு மின் குறை மாநிலமாக இருந்த தமிழகத்தை, கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் மின் வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றி சாதனை படைத்தது; மூன்று ஆண்டுகளில் 2,500 மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன்;

முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு

முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை பெற்றது; காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை உச்ச நீதிமன்றம் மூலம் போராடி மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது;

ஏழைப் பெண்களுக்கு திருமாங்கல்யம்

ஏழைப் பெண்களுக்கு திருமாங்கல்யம்

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் மற்றும் 50,000 ரூபாய் வரை நிதியுதவி; முதல் முறையாக இந்தியா விலேயே விவசாயிகளுக்கு வறட்சிக்கு நிவாரணம் வழங்கியது;

விலையில்லா அரிசி

விலையில்லா அரிசி

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்;

ஏழைகள் வயிறார அம்மா உணவகங்கள்

ஏழைகள் வயிறார அம்மா உணவகங்கள்

ஏழை மக்கள் வயிறார அம்மா உணவகங்கள்; மக்களை நாடிச் சென்று மக்களின் குறைக்குத் தீர்வு காணும் அம்மா திட்டம்; இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்;

கட்டணமில்லாக் கல்வி

கட்டணமில்லாக் கல்வி

கட்டணமில்லாக் கல்வி, விலையில்லா நோட்டுப் புத்த கங்கள், பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், இடை நிற்றலைத் தவிர்க்க ஊக்கத் தொகை என கல்வியில் புரட்சி; பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் திட்டம்;

விலையில்லா கறவைப் பசுக்கள்.. ஆடுகள்

விலையில்லா கறவைப் பசுக்கள்.. ஆடுகள்

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் வறியோரின் வாட்டத்தைப் போக்க விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்; இந்துக்கள் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு மானியம்;

கிறிஸ்தவர்களுக்குப் புனிதப் பயணம்

கிறிஸ்தவர்களுக்குப் புனிதப் பயணம்

கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு மானியம்; தமிழ்நாடு காவல் சிறப்பு இளைஞர் படையில் 10,099 பேர் பணி நியமனம்; 618 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்; ஸ்ரீரங்கம் மற்றும் பழனி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம்; ஸ்ரீரங்கத்தில் 128 கோடி ரூபாய் செலவில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்; ஸ்ரீரங்கம், நாவலூர் குட்டப்பட்டில் 75 கோடி ரூபாய் செலவில் தேசிய சட்டப் பள்ளி;

பொறியியல் கல்லூரிகள்

பொறியியல் கல்லூரிகள்

347 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் தேனி, தஞ்சாவூர், தருமபுரி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பொறியியல் கல்லூரிகள்; 3 ஆண்டுகளில் 36 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கம்; மறைந்த வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்- நியமன தாரருக்கான நிதி உதவி 5.25 லட்சம் ரூபாயாக உயர்வு; 31 ஆயிரத்து 706 கோடி ரூபாய் முதலீட்டில் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி 1 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திட வழிவகை; வளமான பிரிவினரை நீக்காமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை நிலை நிறுத்தியது; முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;

மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவி

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளின் 4 மணி நேர பணிக்கு ஒரு நாள் பணிக்கான ஊதியம்; வருமான உச்சவரம்பின்றி மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் திருமண உதவித் தொகை; கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக் கூடிய முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்; சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பன்முக உயர் சிறப்பு மருத்துவமனை; பிளாஸ்டிக் சாலைகள் அமைத்தல்;

திண்டுக்கல் - தஞ்சாவூர் மாநகராட்சிகள்

திண்டுக்கல் - தஞ்சாவூர் மாநகராட்சிகள்

தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு,சூரிய மின்சக்தியுடன் கூடிய முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம்; கைத்தறி நெசவாளர் களுக்கென 10,000 பசுமை வீடுகள் வழங்கும் திட்டம்; 1,026 கோடி ரூபாய் செலவில் 6,000 புதிய பேருந்துகள்; தடப் பேருந்துகளின் எண்ணிக்கை 20,684 ஆக உயர்வு;

அம்மா குடிநீர்

அம்மா குடிநீர்

பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் 10 ரூபாய்க்கு அம்மா குடிநீர்; சென்னையில் 40 வழித் தடங்களில் 100 சிற்றுந்துகள்; தாட்கோ மூலம் சுய தொழில் தொடங்க 497 கோடியே 78 லட்சம் ரூபாய் கடன் உதவி, இதில் 152 கோடியே 42 லட்சம் ரூபாய் மானியம்; பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உயர்வு; சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் இரட்டிப்பு;

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிப்பு; இந்தியாவிலேயே முதன் முறையாக, நுண்ணீர் பாசனத்திற்காக சிறு மற்றும் குறு விவசாயிளுக்கு 100 விழுக்காடு மானியம்; பிற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியம்; 1 ஏக்கர் என்ற உச்சவரம்பு நீக்கம்; விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் 9,000 ரூபாயாக உயர்வு உட்பட முத்திரை பதிக்கும் முத்தான பல்வேறு திட்டங்களை மூன்றே ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை அ.தி.மு.க. அரசு படைத்திருக்கிறது.

முத்திரை பதித்த முத்தான சாதனைகள்

முத்திரை பதித்த முத்தான சாதனைகள்

எனது தலைமையிலான அ.தி.மு.க அரசின் முன்றாண்டு கால ஆட்சியில் தமிழகம் முழுமையான வளர்ச்சியை எய்திடும் வகையிலான முத்திரை பதிக்கும் முத்தான சாதனைகளை விளக்குதல் மற்றும் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தலுக்கான பொதுக்கூட்டங்கள் வருகின்ற 31.5.2014 சனிக் கிழமை முதல் 2.6.2014 திங்கட்கிழமை வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ளன.

கூட்டங்கள்.. கலை நிகழ்ச்சிகள்

கூட்டங்கள்.. கலை நிகழ்ச்சிகள்

பொதுக்கூட்டங்கள்; கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விவரங்கள் அடங்கிய பட்டியல், இத்துடன் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தமது பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

வேளச்சேரியில் ஓ.பன்னீர் செல்வம்

வேளச்சேரியில் ஓ.பன்னீர் செல்வம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், மாவட்டத்தில் பேசுவோர் பட்டியல்:-

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்-வேளச்சேரி, பி.எச்.பாண்டியன்- சைதாப்பேட்டை, ஈ.வி.கே.சுலோசனா சம்பத்-அனகாபுத்தூர், அமைச்சர் வளர்மதி, நடிகை குயிலி, ஜெயவர்தன் எம்.பி.-தியாகராயநகர், எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., ஜே.சி.டி.பிரபாகர்- வில்லிவாக்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அலெக்சாண்டர்-அம்பத்தூர், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜலட்சுமி எம்.எல்.ஏ-பரங்கிமலை கிழக்கு, பரிதி இளம்வழுதி, மரகதம் குமரவேல் எம்.பி.- காஞ்சீபுரம்.

மயிலாப்பூரில் வெண்ணிற ஆடை நிர்மலா

மயிலாப்பூரில் வெண்ணிற ஆடை நிர்மலா

பி.எச்.பாண்டியன்- ஆயிரம்விளக்கு, அமைச்சர் கோகுல இந்திரா, எஸ்.ஆர்.விஜய குமார் எம்.பி.-அண்ணா நகர், டாக்டர் மைத்ரேயன்- மயிலாப்பூர் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, மனோஜ் பாண்டியன்- பெரம்பூர், வி.அலெக்சாண்டர்- குன்றத்தூர், அமைச்சர் அப்துல்ரகீம், ரபிபெர்னார்ட் எம்.பி.- எழும்பூர், தாஜ்குமாரி-திருவள்ளூர் நகரம்.

English summary
Chief Minister Jayalalitha has asked her party men to go and thank the voters in the state for making the party candidates to win in the LS election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X