For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்நினோ தாக்கம்.. சென்னையை உருக்குலைத்த வரலாறு காணாத கனமழை...

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: 100 ஆண்டுகளில் வரலாறு காணாத பெருமழையை சென்னை எதிர்கொள்வதற்கு 'எல்நினோ' எனும் பருவ நிலை மாற்றத்தின் தாக்கமே மிக முக்கிய காரணம் என்கின்றனர் வானிலை ஆய்வு வல்லுநர்கள்...

Climate experts say El Nino responsible for heavy rain in Chennai

சென்னையில் வரலாறு காணாதயின் பின்னணி....

  • தமிழகத்தில் பொதுவாக வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் சராசரியாக 44 செ.மீ. மழை கிடக்கும்.
  • நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை சுமார் 65 செ.மீ. மழை கிடைத்துள்ளது.
  • இந்த வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சென்னைக்கு 79 செ.மீ மழை பெய்ய வேண்டும்.
  • நடப்பாண்டில் சென்னையில் இதுவரை 158 செ.மீ. மழை கொட்டியுள்ளது.
  • டிசம்பர் 1-ந்தேதி மட்டும் 49 செ.மீ. மழை பெய்தது.
  • 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 49 செ.மீ மழை சென்னையில் கொட்டியது.
  • டிசம்பர் 4-ந்தேதியும் 40 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
  • இத்தகைய வரலாறு காணாத கனமழைக்கு எல்நினோ எனப்படும் பருவ நிலை மாற்றமும் ஒரு காரணமாகும்.
  • பசிபிக் கடல் நீர்மட்டம் பொதுவாக 60 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இது 80 டிகிரி மற்றும் அதற்கு அதிகமாக உயரும் போது வானிலையில் கடும் மாற்றங்கள் உருவாகும். இதைத்தான் எல்நினோ என குறிப்பிடுகின்றனர்.
  • இந்த எல் நினோ விளைவின் காரணமாக உலகின் பல பகுதிகளிலும் கடல் நீரின் வெப்பம் அதிகரித்தது.
  • தெற்கு வங்க கடல் பகுதியில் வெப்பத்தின் அளவும் மிகவும் அதிகரித்து வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாயின.
  • கடல் நீரும் அதிக அளவில் ஆவியாகி தீவிர மழை மேகங்களை நிலப்பகுதியை நோக்கி அடுத்தடுத்து அனுப்பியது. இதை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனும் கூட உறுதி செய்திருந்தார்.
  • இதுவே சென்னையிலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்ய காரணம்.
  • எல் நினோவின் தாக்கம் நீடிக்கும்; இதனால் தொடர்ந்தும் கனமழைக்கு வாய்ப்பு உண்டு எனவும் எச்சரிக்கப்படுகிறது.
English summary
Climate experts said that the heavy rains in coastal Tamil Nadu including Chennai under water is due to the El Nino impact.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X