For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகள் முறைகேடு.. கோவை மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை

இடஒதுக்கீட்டு முறைகேடுகளை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை-வீடியோ

    கோவை: கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி முறையாக மாணவர்களை தேர்வு செய்வதில்லை எனவும், பள்ளியில் சேர்த்தாலும் உடனடியாக கட்டணத்தை கட்ட பள்ளிகள் வருபுறுத்துவதாக கூறியும் கோவையில் பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இந்த வருடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு, அதற்கான குலுக்கல் முறையும் கோவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

    coimbatore ceo office siege for abuse in reservation

    இந்நிலையில் பெற்றோர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் குலுக்கல் முறை நடைபெற்றதாக புகார் எழுந்து உள்ளது. தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளும் படிக்க மிகுந்த ஆர்வமாக இருந்து வந்த சூழலில் தற்போது முற்றிலும், ஏமாற்றும் வேலையாக பள்ளிகள் நடந்து கொள்வதாகவும் , சில பள்ளிகளே மாணவர்களை தேர்வு செய்து சேர்க்கை நடத்தப்படுவதாகவும் பெற்றோர்களுக்கு எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழ தொடங்கியுள்ளன.

    இந்த ஆண்டு முதல் பள்ளியின் அருகே உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற தமிழக அரசின் அறிவிப்பால் பெரும்பாலான மாணவர்கள் சேர முடியாத நிலையில் இருப்பதால், அந்த இட ஒதுக்கீடு முற்றிலும் காலியாகவே உள்ளதாக கூறுகின்றனர்.

    தங்களுக்கு இடம் வழங்க வேண்டி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி அரசே அவர்களுக்கான கட்டணத்தை கட்டும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த இட ஒதுக்கீட்டில் மாணவர்களை பள்ளிகள் சேர்த்தாலும், உடனடியாக பல்வேறு கட்டணங்களை கட்ட வற்புறுத்துவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

    English summary
    Parents have staged a protest at the CEO office in Coimbatore, claiming that poor schools in the private schools are not formally selected students as per quota in the school and they are urgently forced to build the fees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X