‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு எதிர்ப்பு.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாவதில் வந்த தடை !!- வீடியோ

  சென்னை: 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  complaint on Sodakku mela sodakku song to to Chennai Police commissioner

  இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல் அண்மையில் வெளியானது.

  இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைதுள்ளது. இந்நிலையில் சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

  சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பாடலாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A ADMK personality complaints to Chennai Police commissioner about the Sodakku mela sodakku song. Sodakku mela sodaku song is in Thana serntha kootam movie.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X