For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

25 பேர் அடங்கிய தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு.. தொடங்கியது சலசலப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

B.S. Gnanadesikan
சென்னை: லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தலைமையிலான 25 பேர் அடங்கிய தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒப்புதல் தெரிவித்தார். இந்த குழு அறிவிப்பைத் தொடர்ந்து அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு தொடர்பாக அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஜனார்தன் திரிவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் குழுவுக்கு தலைவராக ஞானதேசிகன் இருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, குமரி அனந்தன், எம். கிருஷ்ணசாமி மற்றும் கே. கோபிநாத், கே. ஜெயகுமார், சு. திருநாவுக்கரசர், டாக்டர் ஏ. செல்லகுமார், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஆர். பிரபு, மணிசங்கர் அய்யர், தனுஷ்கோடி ஆதித்தன், ஜே.எம். ஹாரூண், எஸ். பீட்டர் அல்போன்ஸ், டி. யசோதா, கே. பாரமலை, சாய்லட்சுமி, கே. செல்வராஜ், சுனில் ராஜா ஆகியோருடன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இடம்பெறுவார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள நான்கு பேரில் சிதம்பரம் மட்டும் லோக்சபா உறுப்பினராவார். இதேபோல, தற்போது லோக்சபா உறுப்பினர்களாக எம். கிருஷ்ணசாமி, ஜே.எம். ஹாரூண் ஆகியோர் உள்ளனர். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த யுவராஜ் சில மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதன் பிறகு அப்பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படாத நிலையில், தேர்தல் குழு உறுப்பினராக இளைஞர் காங்கிரஸ் தலைவர் இருப்பார் என காங்கிரஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
As a mark of putting its Tamil Nadu unit on poll mode, Congress president Sonia Gandhi on Tuesday announced the composition of a 25-member Pradesh Election Committee. Headed by Tamil Nadu Congress Committee president B.S. Gnanadesikan, the committee includes Union Ministers P. Chidambaram, G.K. Vasan, Jayanthi Natarajan and E. M. Sudarasana Natchiappan. Three All India Congress Committee secretaries – K. Jayakumar, A. Chella Kumar and S. Thirunavaukkarasar – are part of the panel, according to a press release issued by Janardan Dwivedi, general secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X