மைக் நீட்னா வலிப்பு வந்து உளறி தள்ளும்... எஸ்வி சேகர் சாடுவது யாரை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் தமது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் கடந்த சில நாட்களில் எவரது பெயரையும் குறிப்பிடாமல் கடுமையாக சாடி வருகிறார். இதன் தொடர்ச்சியாக ''மைக் நீட்னா வலிப்பு வந்து உளறி தள்ளும்' என சர்ச்சைக்குரிய பதிவையும் போட்டிருக்கிறார் எஸ்.வி.சேகர்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக ட்விட்டரில் போடும் பதிவுகள் தமிழக அரசுக்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கமல்ஹாசனை ஆதரித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

Controversy erupts over Sve Sheker tweets

சர்ச்சை பதிவுகள்

அதிமுக, பாஜக தலைவர்கள் கமல்ஹாசனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று ட்விட்டரில் போட்ட சில பதிவுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


அதில், எங்க அக்கா சேவையை இந்த ஊரே பாராட்டிச்சே. என்னசேவை பண்ணினாங்க? புளிசேவை, லெமன் சேவை,தேங்காய் சேவை. வந்து சாப்டு பாரேன். அப்படி சமைப்பாங்கோ என ஒரு பதிவு போட்டிருக்கிறார். எஸ்.வி.சேகரின் இந்த ட்வீட்டர் பதிவில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைத்தான் அவர் விமர்சித்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக, நியாயமாக பேச வேண்டும் என்பதைவிட தான் முதலில் பேசிட வேண்டும் என்ற வெறியே உளறள்களுக்கு முக்கிய காரணம் என மற்றொரு பதிவு போட்டுள்ளார். எஸ்வி சேகர் யாரையும் குறிப்பிடாமல் இப்பதிவை போட்டிருந்தாலும் இதில் கருத்து தெரிவித்துள்ளவர்கள், எச். ராஜா- தமிழிசை இடையேயான போட்டியையா சொல்கிறீர்கள்? எனவும் கமல்ஹாசனை சொல்கிறார் என்பது போலவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அரசியல்ல சில "AK" முன்னால் கேமரா மைக் நீட்னா போதும் வலிப்பு வந்து உளறி தள்ளும் என ஒரு பதிவிட்டிருக்கிறார். இதுவும் பூடகமாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பதிவிடப்பட்டுள்ளது. இதிலும் எஸ்.வி.சேகர் யாரை குறிப்பிடுகிறார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
New Controversy erupted over Actor Sve Sheker tweets on TN Politics.
Please Wait while comments are loading...