For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடலும் பாடலும் என்று ஆபாச நடனம் நடத்துவதா? : ஹைகோர்ட் குட்டு

கோவில் விழாக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதாகக் கூறி பொது இடத்தில் ஆபாச நடனம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்துவதாக அனுமதி பெற்று, ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோவில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்ததாகவும், அவற்றை பரிசீலித்து, நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Court declines permission for dance programmes at temple

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், நாமக்கல் மாவட்டத்தில் அடிக்கடி கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி வழக்குகள் தொடரப்படுவதை கவனித்து, மாவட்ட எஸ்பி, ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட டிஎஸ்பி, திருவிழாக்கள் குறித்த அறிக்கையும், அதற்கான வீடியோ பதிவையும் கோர்டில் தாக்கல் செய்தார். அந்த வீடியோவில், ஆடல் பாடல் என்ற பெயரில் பெண்கள் ஆபாச நடனம் ஆடுவதும், இளைஞர்கள் குடிபோதையில் கும்மாளம் போடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்துவதாக அனுமதி பெற்று, ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி உத்தரவு பிறப்பித்ததற்காக நீதிபதி பி.என்.பிரகாஷ் தன் உத்தரவில் வேதனையும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டம் ஒழங்கு பிரச்சனை தொடர்பாக முடிவெடுக்கும் காவல் துறையினரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இதுபற்றி அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கோவில் விழாக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதாகக் கூறி பொது இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக் கூறி 6 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவினால் கலைநிகழ்ச்சி நடத்தும் திண்டுக்கல் ரீட்டாக்கள் கவலையடைந்துள்ளனர்.

English summary
Recording his profound regret over having allowed a number of petitions seeking permission to conduct "dance programmes" at temple festivals in Namakkal district, the dance programmes, Madras High Court judge P.N. Prakash dismissed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X