விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.. சென்னையில் ஏரிகளின் நிலை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கனமழையால் மூழ்கியது மெரினா கடற்கரை- வீடியோ

  சென்னை: சென்னையில் நேற்று மாலையில் இருந்து கொடூரமாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி இருக்கின்றன. இதுவரை பெய்த மழை காரணமாக சென்னையில் இருக்கும் 16 ஏரிகளில் முக்கியமான ஏரிகள் அனைத்தும் பெருமளவில் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் இன்னும் சில மணி நேரத்தில் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

  சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

  சென்னையின் 70 சதவிகிதமான இடங்களில் உயரமாக நீர் நிரம்பி இருக்கிறது. பெரும்பாலான இடங்கள் மொத்தமாக மூழ்கிவிட்டன. கடந்த 8 மணி நேரமாக சென்னையின் அனைத்து பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

   16 ஏரிகள்

  16 ஏரிகள்

  இந்த நிலையில் சென்னையை இரவு முழுக்க கொடூரமாக பெய்த இந்த மழை காரணமாக அங்கு இருக்கும் முக்கால்வாசி ஏரிகள் நிரம்பி இருக்கிறது. தற்போது செயல்படும் நிலையில் சென்னையில் 16 ஏரிகள் இருக்கின்றன. இதில் 5 ஏரிகளால் சென்னைக்கு பாதிப்பு வரலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

   தாம்பரம் ஏரி

  தாம்பரம் ஏரி

  சென்னையின் தாம்பரம் பகுதிகளில் பெய்த கடுமையான மழையால் அங்கு உள்ள ஏரிகள் நிரம்பி இருக்கிறது. அங்கு இருக்கும் செம்பாக்கம் ஏரி மொத்தமாக நிரம்பி தண்ணீர் வெளியே வந்து கொண்டு இருக்கிறது. அந்த ஏரிக்கு பக்கத்தில் வீடு கட்டியவர்களின் வீடுகளுக்குள் வெள்ளம் சென்று இருக்கிறது.

   கரையை உடைக்க முயற்சி

  கரையை உடைக்க முயற்சி

  இதையடுத்து சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ராஜகீழ்ப்பாக்கம் ஏரியும் நிரம்பி இருக்கிறது. நேற்று அந்த பகுதியில் தண்ணீர் அதிகம் ஆனதை அடுத்து சிலர் அந்த ஏரியின் கரையை உடைக்க முயன்று இருக்கிறார்கள். இது கடைசி நொடியில் தடுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த ஏரி தற்போது கொள்ளளவையும் தாண்டி நிரம்பி இருக்கிறது.

   மேற்கு தாம்பரம் பாதிப்பு

  மேற்கு தாம்பரம் பாதிப்பு

  இதேபோல பீர்க்கன்காரணை ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இந்த ஏரிக்கரையில் இருந்து பஸ் நிறுத்தம் வழியாக தண்ணீர் வெளியேறும் வகையில் கரை உடைபட்டு இருக்கிறது. இதன் காரணமாக மேற்கு தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் நிரம்பி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

   ஏரிகள் நிரம்பும்

  ஏரிகள் நிரம்பும்

  மேலும் சென்னையின் முக்கியமான ஏரிகளான புழல் ஏரியில் 672 மில்லியன் கன அடி நிரம்பி இருக்கிறது. இதன் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 679 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது. செம்பரம்பாக்கம் இன்னும் சில நாட்களில் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai and otherparts of Tamilnadu has affected by rain worstly. The level of water increased in Chennai rivers. This is the current state of rivers in Chennai after heavy rain.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற