கேள்வி கேட்ட செய்தியாளரை மிரட்டும் தொனியில் ஆவேசமாக பேசிய ஜெ.தீபா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போயல் கார்டன் இல்லத்தில் நடந்தது குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ஜெ.தீபா.

கடந்த ஞாயிறன்று தனது தம்பி கூப்பிட்டதாக போயஸ் கார்டன் சென்றார் தீபா. ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீட்டிற்கு நுழைந்து அங்கிருந்த சசிகலாவின் புகைப்படங்களை அகற்றியதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டில் இருந்த பாதுகாவலர்கள் தீபாவை தடுத்துள்ளனர். இதை வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களையும் தாக்கினர். இதனால் போயஸ்கார்டன் வீடு பரபரப்பானது.

Deepa Jayakumar angry speech in tv interview

இந்நிலையில் இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ஜெ.தீபா பேட்டியளித்துள்ளார். அப்போது கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது, என் மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டினார்கள். அதைப் பற்றி புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி சரியில்லை எனக் கூறினார்.

மேலும், பொது வாழ்க்கையில் இருந்து கொண்டு நீங்கள் கோபமாக பேசியது சரிதான என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது தீபா, என்னை அப்படி பேச வைத்தார்கள். நான் எதற்கும் பயப்பட மாட்டேன், பின்வாங்கவும் மாட்டேன் என்று ஆவேசமாக கூறினார் தீபா. திடீரென தீபா ஆவேசமாக பேச ஆரம்பித்தது கேள்வி கேட்ட செய்தியாளரை மிரட்டும் தொனியில் அமைந்துவிட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
J Jayalalithaa's niece Deepa Jayakumar angry speech in tv interview
Please Wait while comments are loading...