For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்கணி தீ விபத்து: மீட்பு பணியில் நவீன ஹெலிகாப்டரை பயன்படுத்த ஏற்பாடு- நிர்மலா சீதாராமன்

தேனி மாவட்டம் குரங்கணி விபத்து மீட்பு பணியில் ஏஎல்எச் என்ற நவீன ஹெலிகாப்டரை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் குரங்கணி விபத்து மீட்பு பணியில் ஏஎல்எச் என்ற நவீன ஹெலிகாப்டரை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.

Defence Minister Nirmala Seetharaman says that ALH helicopter will help in Theni rescue operation

இந்தவிபத்தில் இது வரை 6 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த மத்திய அரசு விமான படையை அனுப்பி இருக்கிறது. கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து 4 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.

மீட்புப்பணிகள் குறித்து தற்போது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

அதில் ''அதிகாலை 3 மணியில் இருந்து வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. '' என்றுள்ளார்.

மேலும் ''மலை செங்குத்தாக இருப்பதால் ஹெலிகாப்டரை இறக்க வாய்ப்பில்லை. விஞ்ச் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.ஏஎல்எச் என்ற நவீன ஹெலிகாப்டரை வரவழைத்து மீட்க ஏற்பாடு.'' என்றுள்ளார்.

English summary
Wild fire strikes in Theni kills 8 girl student. 25 more college girl rescued from inside the fire area. Kerala police extends their help on recue operation in Theni Forest Fire. Defence Minister Nirmala Seetharaman says that ALH helicopter will help in Theni rescue operation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X