For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஒன்இந்தியா' மெகா சர்வே: ரூபாய் நோட்டு அறிவிப்பை மோடி வாபஸ் பெறக்கூடாது.. 70.4% பேர் அதிரடி கருத்து

ரூபாய் நோட்டு அறிவிப்பை மோடி வாபஸ் பெறக்கூடாது என்று ஒன்இந்தியா நடத்திய ஆன்லைன் சர்வேயில் 70 விழுக்காடு மக்கள் கூறியுள்ளனர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ரூபாய் நோட்டு தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள திடீர் உத்தரவு குறித்து மாபெரும் ஆன்லைன் சர்வே நடத்தியது 'ஒன்இந்தியா'.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி மற்றும் குஜராத்தி மொழி ஒன்இந்தியா வெப்சைட் வாசகர்கள் இக் கருத்துக் கணிப்பில் வாக்களித்தனர். 31198 பேர் வாக்களித்ததன் மூலம், ஆன்லைன் வாக்களிப்பில் ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது இந்த கருத்துக் கணிப்பு.

ரூபாய் ஒழிப்பு தொடர்பாக 11 கேள்விகளை முன்வைத்து ஒன் இந்தியா தமிழ் சர்வே நடத்தப்பட்டது. ரூபாய் ஒழிப்பு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ற பெயரில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அரசு தோற்கவில்லை

அரசு தோற்கவில்லை

இதில், அரசு தோல்வியடைந்து விட்டதாக கருதுகிறீர்களா.. இதை வாபஸ் பெற வேண்டுமா? என்ற கேள்விக்கு ஆம் என்று 29.6% சதவீதம் பேரும், இல்லை என 70.4% பேரும் கூறியுள்ளனர். ரூபாய்க்காக மக்கள் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையிலும், அறசு தோல்வியடையவில்லை என்றும் இந்த திட்டத்தை வாபஸ் பெறக்கூடாது என்றும், 70.4% பேர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாபஸ் பெறக்கூடாது

வாபஸ் பெறக்கூடாது

இந்த குறிப்பிட்ட கேள்விக்கு வாக்களித்த தமிழ் வாசகர்கள் எண்ணிக்கை 24,322 ஆகும். இதில், அரசு தோல்வியடைந்துவிட்டது மற்றும், திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என கூறி வாக்களித்தோர் எண்ணிக்கை, 8017 ஆகும். இல்லை என வாக்களித்தோர் எண்ணிக்கை 16305 ஆகும்.

டிசம்பர் நிலைமை

டிசம்பர் நிலைமை

அதேபோல, வரும் டிசம்பருக்குள் ரூபாய் தட்டுப்பாடு நிலைமை சரியாகும் என்று மோடி கூறுவதை நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என 64% பேர் கூறியுள்ளனர். இல்லை என்போர் 36% ஆகும். டிசம்பரை நோக்கி இவர்கள் நம்பிக்கையோடு இருப்பது இந்த சர்வே மூலம் தெளிவாகிறது.

டிசம்பரை நோக்கி

டிசம்பரை நோக்கி

இந்த கேள்விக்கு வாக்களித்த தமிழ் வாசகர்களில், 14764 பேர், டிசம்பருக்கு பிறகு நிலைமை சரியாகும் என நம்பிக்கை கொண்டுள்ளோராகும். நிலைமை சீராகாது என கூறுவோர் 9558 பேராகும்.

தேர்தலில் தாக்கம்

தேர்தலில் தாக்கம்

ரூபாய் நோட்டு அறிவிப்பு, சட்டசபைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு 3 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன. அதன்படி, பாஜகவுக்கு லாபம் என்ற ஆப்ஷனுக்கு, 36.9% பேரும், பாஜகவுக்கு தோல்விதான் என்று 20.3% பேரும், பாதிப்பு இல்லை என 42.8% பேரும் கருத்து கூறியிருந்தனர்.

மூன்று வாய்ப்பு

மூன்று வாய்ப்பு

இந்த கேள்விக்கு வாக்களித்த தமிழ் வாசகர்களில் 5152 பேர் பாஜகவுக்கு பாதகம் எனவும், 7706 பேர் பாஜகவுக்கு பாதகம் எனவும் வாக்களித்திருந்தனர். இதை மக்கள் மறந்துவிடுவார்கள். சட்டசபை தேர்தலில் இப்பிரச்சினை எதிரொலிக்காது என 11464 பேர் வாக்களித்திருந்தனர்.

English summary
Oneindia ran a survey in English, Tamil, Telugu, Kannada, Malayalam, Bengali and Gujarati channels and got 31198 people participated in the survey. This is one of the biggest online polls and we are giving you the results of survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X