தமிழர்கள் பிச்சைக்காரர்கள் என்று திமிர் கமெண்ட் அடித்த கன்னட நடிகைக்கு தமிழகத்தில் ரத்தின கம்பளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறி எதிர்ப்பை சம்பாதித்து, கோலிவுட்டைவிட்டு விலகிய நடிகை தன்யா பாலகிருஷ்ணன் நைசாக மீண்டும் தமிழ் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டதாலோ என்னவோ தமிழ் பக்கம் கறையொதுங்கியவர் தன்யா பாலகிருஷ்ணா. சூர்யா நடித்த 7ம் அறிவு திரைப்படத்தில் இவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 2012ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் தோல்வி அவசியப்பட்டது. பெங்களூர் அணி தோல்வியடைந்த நிலையில் சென்னை பிளேஆப் சுற்றுக்குள் சென்றது.

பிச்சைக்காரர்கள்

பிச்சைக்காரர்கள்

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த தன்யா பாலகிருஷ்ணன், வார்த்தைகளை மிக மோசமாக கொட்டியிருந்தார். அவர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியிருந்தார்.

பிச்சையெடுப்பவர்கள்

பிச்சையெடுப்பவர்கள்

"டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்கு பிச்சை எடுத்தீர்கள், நாங்கள் கொடுத்தோம். நீங்கள் மின்சாரத்திற்கு பிச்சையெடுத்தீர்கள் நாங்கள் கொடுத்தோம். உங்கள் ஆட்கள் எங்கள் அழகான நகரை (பெங்களூர்) வந்து ஆக்கிரமித்துக்கொண்டு அசிங்கப்படுத்தினீர்கள், அதை அனுமதித்தோம். இப்போதும், பிளேஆப் நீங்கள் செல்ல எங்கள் கருணைதான் தேவைப்படுகிறது. நாங்கள் இப்படித்தான். நீங்கள் பிச்சையெடுப்பதும், நாங்கள் கொடுப்பதும் வழக்கம்" இவ்வாறு திமிர்த்தனமாக கூறியிருந்தவர்தான் இந்த தன்யா பாலகிருஷ்ணன்.

கோலிவுட்டிலிருந்தே போனார்

கோலிவுட்டிலிருந்தே போனார்

தன்யாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து கோலிவுட்டிலிருந்தே வெளியேறுவதாக அறிவித்தார் தன்யா. "நான் ஒப்புக்கொண்ட அனைத்து படங்களில் இருந்தும் விலகிக்கொள்கிறேன். திரும்பி வரமாட்டேன்" என்று ரோஷமாக தெரிவித்தவர்தான் இந்த தன்யா பாலகிருஷ்ணன். உண்மையில் அப்போது இவருக்கு பட வாய்ப்புகளும் இல்லை என்பது இந்த முடிவுக்கு காரணம். ஆனால், இவரது பிச்சைக்கார கருத்துக்களால், அப்போது இரு மாநிலங்கள் நடுவே பதற்றம் நிலவியது.

ஏன் வந்தார்?

ஏன் வந்தார்?

ஆனால், அப்படி ரோஷத்தோடு முறுக்கிக்கொண்டு போன தன்யா பாலகிருஷ்ணன் இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். ஸ்டார் நெட்வொர்க்கின் ஹாட்ஸ்டார் செயலி வாயிலாக வெளியான As I'm Suffering From Kadhal என்ற வெப்சீரிசில் நடித்துள்ளார். மாரி உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இந்த வெப்சீரிசை இயக்குகிறார். பலான வசனங்கள் பல முகம் சுளிக்க வைக்கின்றது.

மனசு உறுத்தவில்லையா?

தமிழர்களை இவ்வளவு மோசமாக பேசிய ஒருவர், கன்னடத்தில் வாய்ப்பு இல்லாமல் மீண்டும் நைசாக தமிழுக்கு திரும்பியுள்ளார். மறதிதான் தமிழர்கள் தேசிய வியாதியாயிற்றே. இதையும் மறந்து வாய் திறந்து அவர் நடித்த காட்சிகளை பார்த்துக்கொண்டுள்ளனர். தன்யாவும், ரோஷத்தோடு கூறிய வார்த்தைகளை மறந்துவிட்டு இப்போது அதே தமிழகத்தில் பிழைப்புதேடி வந்துள்ளார். ஆனாலும் எப்படித்தான் மனசு உறுத்தாமல் தன்யாவால் தமிழில் நடிக்க முடிகிறதோ தெரியவில்லை?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dhanya issued a statement announcing her decision to quit Kollywood. "I am withdrawing from the film I have accepted and won't come back," she said, But now she is acting in a Tamil web series.
Please Wait while comments are loading...