For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேணும்னா கோர்ட்டுல பாத்துக்கலாம் வாங்க....தங்கதமிழ்ச்செல்வன் சவால்!

கட்சி விதிப்படி துணை பொதுச்செயலாளர் தினகரனுக்குத் தான் அதிகாரம். வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள் என்று எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

புதுச்சேரி : கட்சியில் நிர்வாகிகளை நியமிக்க துணை பொதுச்செயலாளருக்கே அதிகாரம் இருக்கிறது என்பது தான் கட்சியின் சட்டம் சொல்கிறது, தேவையெனில் இந்த விவகாரத்தை கோர்ட்டில் சந்தித்து கொள்ளலாம் என்று தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து புதுச்சேரி தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ள தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கூறியதாவது : அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திறக் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக உறுப்பினர்களுக்கு முழுமையான அழைப்பு விடுக்கப்படவில்லை. கூட்டத்தில் யார் யாரோ பங்கேற்றுள்ளனர், அந்தப் படங்களைப் பார்த்தாலே தெரியும் பொறுப்பில் இல்லாத பலர் தான் அதில் பங்கேற்றுள்ளனர்.

சசிகலா, தினகரனை நீக்கும் தீர்மானத்தை மனோஜ்பாண்டியன் முன்மொழிகிறார். கட்சியில் இவருக்கு என்ன பொறுப்பு இருக்கிறது. ஜெயா டிவி தனியர் சொத்து என்பது எல்லோருக்குமே தெரியும். சசிகலாவால் நியமிக்கப்பட்ட செங்கோட்டையன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இன்னமும் கட்சியில் அந்த பொறுப்புகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Recommended Video

    Nanjil Sampath Slammed PM Modi
     எடுபடாத தீர்மானம்

    எடுபடாத தீர்மானம்

    அப்படி இருக்கும் போது துணை பொதுச்செயலாளர் தினகரனின் நியமனம் மட்டும் செல்லாது என்று இவர்கள் எப்படி சொல்கிறார்கள். முதல்வர் பழனிசாமி அணி கொண்டு வந்த 4 தீர்மானமும் எடுபடாது. கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும், பொதுச்செயலாளர் செயல்படாத நிலையில் பொதுக்குழுவில் குறிப்பிட்ட நிர்வாகிகளின் கையெழுத்தை பெற்று பொதுச்செயலாளர் அனுமதியுடன் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும்.

     கோர்ட்டில் பாத்துக்கலாம்

    கோர்ட்டில் பாத்துக்கலாம்

    இவர்கள் எடுக்கும் எந்த முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது. பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் நாங்ள் நான் சட்டப்படி நிர்வாகிகளை மாற்றி புதியப் பொறுப்புகளை அறிவித்துள்ளோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடி இந்தப் பிரச்னை குறித்து வழக்கு போடுங்கள் நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

     எங்களுக்குத் தான் அதிகாரம்

    எங்களுக்குத் தான் அதிகாரம்

    அரசு அதிகாரத்தை வைத்து இவர்கள் தவறான முடிவுக்கு வருகிறார்கள். இவர்களின் செயலை மக்களும், தொண்டர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் சரியான முடிவை எடுப்பார்கள். எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, முதல்வரை மாற்ற வேண்டும், கட்சியும் ஆட்சியும் எங்களிடம் தான் உள்ளது.

     ஏன் நடவடிக்கை இல்லை?

    ஏன் நடவடிக்கை இல்லை?

    ஓ.பன்னீர்செல்வம் அணி நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எங்கள் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    English summary
    Dinakaran supporting MLA Thangatamizhselvan says that no one's resolution will control them and Party, government both were with them only and added that they may approach court in this regard.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X