தினகரன் ஆதரவு 20 எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் கூண்டோடு ராஜினாமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவு 20 எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுவையில் இருந்து கர்நாடகாவின் குடகு மலைக்கு ஜாகையை மாற்றியுள்ளனர் தினகரன் ஆதரவு 20 எம்.எல்.ஏ.க்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கம் தர சபாநாயகர் தனபால் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

அதிரடி வியூகம்?

அதிரடி வியூகம்?

இந்த உத்தரவின் அடிப்படையில் குடகு மலையில் இருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் சென்னை வருகை தர உள்ளனர். அப்போது சசிகலா, தினகரன் நீக்கத்துக்கு பதிலடி தரும் வகையில் அதிரடி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கூண்டோடு ராஜினாமா?

கூண்டோடு ராஜினாமா?

ஒட்டுமொத்தமாக 20 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி தருவது என முடிவு செய்துள்ளனராம். அப்படியான ஒரு நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டாக வேண்டும் என்பது தினகரன் அணியின் வியூகம்.

எடப்பாடி தரப்பு வியூகம்

எடப்பாடி தரப்பு வியூகம்

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்போ, 20 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கையில் 50% என்கிற அடிப்படையில் எளிதாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம் என கூறி வருகிறதாம். இதனால் ராஜினாமா செய்வது பற்றி தீவிரமாக ஆலோசிக்கிறது தினகரன் தரப்பு.

திமுகவுடன் பேச்சுவார்த்தை

திமுகவுடன் பேச்சுவார்த்தை

இதனிடையே திமுக எம்.எல்.ஏக்களையும் கூண்டோடு ராஜினாமா செய்ய வைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம். என்னதான் திமுக எதிரி என தினகரன் கூறினாலும் அக்கட்சியுடனான திரைமறைவு பேச்சுகள் சுமூகமாகவே நடைபெற்று வருகிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that AIADMK Dinakaran supporting MLAs to decide to resign.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற