அதிமுக அமைப்புச் செயலர்கள், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் நியமனம்- நாஞ்சில் சம்பத்துக்கு மீண்டும் பதவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் 18 அமைப்பு செயலாளர்களை நியமித்து டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். எடப்பாடி கோஷ்டிக்கு எதிரான எம்.எல்.ஏக்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட பலருக்கும் கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளளார்.

அதிமுகவின் துணை பொதுச்செயலராக டிடிவி தினகரனை நியமித்திருந்தார் சசிகலா. ஆனால் அதிமுகவின் இரு கோஷ்டிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது.

இப்பேச்சுவார்த்தை தொடங்கியதால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். இதனிடையே தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தீவிர அரசியலில்..

தீவிர அரசியலில்..

திகார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். ஆனால் சசிகலாவை சந்தித்த தினகரன், அதிமுக கோஷ்டிகள் இணைய 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். இந்த கெடு முடிவடைந்த நிலையில் இன்று தீவிர அரசியலுக்கு தினகரன் திரும்பியிருக்கிறார்.

சுற்றுப் பயணம்

சுற்றுப் பயணம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் சுற்றுப் பயணம் செய்யப் போவதாக முதலில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் 18 அமைப்பு செயலாளர்கள் உட்பட நிர்வாகிகளை நியமித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

அமைப்பு செயலர்கள்

எம்.எல்.ஏக்களான பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், ஜக்கையன் உட்பட 18 பேர் அமைப்பு செயலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலராக நாஞ்சில் சம்பத், இளவரசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரிவு இணை செயலர்கள்

தேர்தல் பிரிவு இணை செயலர்கள்

தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்களாக நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரை, முன்னாள் எம்பி சின்னசாமி ஆகியோரை தினகரன் நியமித்துள்ளார். அனைத்துலக எம்.ஜிஆர் மன்ற தலைவராக விருதுநகர் கே.கே. சிவசாமி, இணைச் செயலர்களாக வ.து. நடராஜன், ராதாகிருஷ்ணன், சுகுமார் பாபு ஆகியோரும் துணைச் செயலர்களாக நேதாஜி கணேசன், செளந்தரபாண்டியனும் பொருளாளராக முன்னாள் அமைச்சர் வடிவேலும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

அம்மா பேரவை இணை செயலாளர்கள்

அம்மா பேரவை இணை செயலாளர்கள்

அதிமுக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஆம்பூர் பாலசுப்பிரமணி, மாரியப்பன் கென்னடி, டிஏ ஏழுமலை, பழனி, சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி பத்மநாபன், சத்யா பன்னீர்செல்வம், உமாமகேஸ்வரி, சந்திரபிரபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் விவசாய பிரிவு இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK Deputy General Secretary TTV Dinakaran appointed new leaders to Party Key post.
Please Wait while comments are loading...