தினகரனுக்கு எதிராக சம்பந்தி பாஸ்கரனை களமிறக்கும் திவாகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரனுக்கு எதிராக பாஸ்கரனை களமிறக்கும் திவாகரன்- வீடியோ

  சென்னை: டிடிவி தினகரன் தன்னிச்சையாக செயல்படுகிறார். இதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் திவாகரன் திட்டமிட்டுள்ளார். இதற்காகவே தனது சம்பந்தி பாஸ்கரனை களமிறக்கியுள்ளாராம்.

  தஞ்சை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் செய்தார் டிடிவி தினகரன். வரவேற்பு பிளக்ஸ் போர்டுகள் வைப்பதில் தினகரனுக்கும் அவரது சகோதரர் பாஸ்கரன் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை உருவானது.

  தலைவன் பாஸ் பேரவை சார்பாக பாஸ்கரனும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போகிறாராம். 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார்.

  மக்கள் சந்திப்பு பயணம்

  மக்கள் சந்திப்பு பயணம்

  ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பயணம்
  செய்தார். அவரது குடும்பத்தினரே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதற்குக் காரணம் தினகரனின் நடவடிக்கைதானாம்.

  கொம்பு சீவும் திவாகரன்

  கொம்பு சீவும் திவாகரன்

  தினகரனுக்கு எதிராக பாஸ்கரனை கொம்பு சீவி விடுகிறார் திவாகரன். திவாகரனின் மகன் ஜெயானந்திற்கு பாஸ்கரனின் மகளை திருமணம் செய்ய கடந்த ஆண்டே நிச்சயம் செய்திருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜெயானந்த் தனியாக நேதாஜி பாசறை தொடங்கியுள்ளார்.

  தினகரன் திணறல்

  தினகரன் திணறல்

  தினகரனுக்கு எதிராக ஜெயாடிவி சிஇஓ விவேக் செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ், ஈபிஎஸ்ஐ சமாளிக்க தினகரன் படு பிரயத்தனம் செய்து வரும் அதே நேரத்தில் தனது குடும்ப உறுப்பினர்களை சமாளிக்கவும் தினகரன் பல செயல்களை செய்ய வேண்டியுள்ளது.

  களமிறங்கும் பாஸ்கரன்

  களமிறங்கும் பாஸ்கரன்

  டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரனும் தனியாக சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கப் போவதாக கூறியுள்ளார். நான் தலைமை பொறுப்பேற்க காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  சமாளிப்பாரா தினகரன்

  சமாளிப்பாரா தினகரன்

  ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் அவரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் அரசியலில் தலை காட்டி வருகின்றனர். டிடிவி தினகரன் எம்எல்ஏவாக வெற்றி பெற்று கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார். தினகரனுக்கு எதிராக அவரது குடும்ப உறுப்பினர்களே சதி செய்து வருவதால் அதனை சமாளித்து கரையேறுவாரா என்று அவரது ஆதரவாளர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran face to family politics.Sasikala brother Divakaran and Baskaran against TTV Dinakaran.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற