மன்னார்குடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா! போஸ்டரில் ஜெ. சசி, திவாகரனுடன் எடப்பாடி- அதிமுகவில் பரபர!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: மன்னார்குடியில் வரும் 15-ந் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. திவாகரன் கோஷ்டியிடன் நடத்தும் இந்த விழாவுக்காக அச்சிடப்பட்ட போஸ்டரில் சசிகலா மற்றும் எடப்பாடி படங்கள் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவை முழுமையாக கைப்பற்றுவது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு படுதீவிரமாக இருக்கிறது. இப்போது எம்ஜிஆர், ஜெயலலிதா செய்யாத ஒன்றாக தினகரனை வாரிசாக சசிகலா அறிவித்ததை ஏற்க முடியாது என புதிய கோஷத்தை எடப்பாடி கோஷ்டி முன்வைக்கிறது.

இமேஜ் போராட்டம்

இமேஜ் போராட்டம்

அத்துடன் தினகரன், திவாகரன் தரப்புக்கு தாம் யாரென்பதை வெளிப்படுத்த போலீஸ் நடவடிக்கையையும் மேற்கொள்ளலாமா என்பது குறித்தும் கொங்கு கோஷ்டி கூடி கூடி ஆலோசித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தை கடுமையாக எதிர்த்து ஓபிஎஸ்-க்கு இருந்த இமேஜை தம்வசமாக்க எடப்பாடியார் முயற்சிக்கிறார்.

எடப்பாடிக்கு ஆதரவு இல்லை

எடப்பாடிக்கு ஆதரவு இல்லை

ஆனால் எடப்பாடியார் என்றுமே சசிகலாவின் விசுவாசிதான் என மக்கள் கருதுகின்றனர். இதனால் அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு 50 பேரும் 100 பேருமாக மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

ஜெயானந்த் புதிய போஸ்டர்

ஜெயானந்த் புதிய போஸ்டர்

இந்நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்டரை இன்று ரிலீஸ் செய்துள்ளார். மன்னார்குடியில் வரும் 15-ந் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான போஸ்டர்தான் இது.

எடப்பாடி படத்துடன்..

எடப்பாடி படத்துடன்..

இந்த போஸ்டரில் எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, திவாகரன் படங்கள் இ0டம்பெற்றுள்ளன. ஆச்சரியப்படும் வகையில் சசிகலா குடும்பமே வேண்டாம் என கருதுகிற எடப்பாடி படமும் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தை நடத்துவது எம்ஜிஆர், ஜெ. உண்மை தொண்டர்கள் எனவும் போடப்பட்டுள்ளது. இப்போது எடப்பாடி தரப்பு என்ன ரியாக்ஷன் காட்டும் என்பதுதான் கேள்வி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala's Brother Divakaran faction will be celebrate MGR Centenary on Julay 15 at Mannargudi.
Please Wait while comments are loading...