தீபாவளி் மது விற்பனை 10 கோடி... இது நெல்லையில் மட்டும்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் போது டாஸ்மாக் மூலம் ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பண்டிகைக் காலங்களில் துணி எடுக்கக் குவியும் கூட்டத்தைப் போல மதுக் கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை குடிமக்கள் நன்றாக குடித்தும், பட்டாசுகளை வெடித்தும் கலகலப்பாக கொண்டாடியுள்ளனர்.

அதிகரிக்கும் மது விற்பனை
பண்டிகை காலங்களில் போது டாஸ்மாக் மூலம் மது விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

நெல்லையில் 228 மதுக் கடைகள்
நெல்லை மாவட்டத்தில் 228 மது கடைகள் உள்ளன. இவற்றில் கூடங்குளம், கோபாலசமுத்திரம் ஆகிய கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை.

வழக்கம் போல இந்தாண்டும்.. சியர்ஸ்
வழக்கம் போல் இந்தாண்டும் தீபாவளி பண்டிகையின் போது நெல்லை மாவட்டத்தில் மது விற்பனை அமோகமாக நடந்தது. அனைத்து மது கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

ஞாயிற்றுக்கிழமை இரட்டிப்பு குடி...
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் மது விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்தது.

பிராந்தி, விஸ்கிக்குத்தான் கிராக்கி
நெல்லை மாவட்டத்தில் தீபாவளி அன்று பிராந்தி, விஸ்கி வகைகள் ரூ.3 கோடியே 99 லட்சத்து 66 ஆயிரத்து 500க்கும், பீர் வகைகள் ரூ.56,61,900க்கும், விற்றுள்ளன. மொத்தம் ரூ.4 கோடியே 56 லட்சத்து 28 ஆயிரத்து 400க்கு விற்பனை நடந்துள்ளது.

கடந்த ஆண்டை விட ரூ. 71.17 லட்சம் அதிகம்
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.3 கோடியே 85 லட்சத்து 10 ஆயிரத்து 500க்கு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.71 லட்சத்து 17 ஆயிரத்து 900 அதிகமாக விற்றுள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் அமோக விற்பனை
தீபாவளிக்கு முந்திய நாள் விஸ்கி, பிராந்தி வகைகள் ரூ.8 லட்சத்து 42 ஆயிரத்தி்ற்கும், பீர் வகைகள் ரூ.20 லட்சத்து 49 ஆயிரத்து 300க்கும் விற்றுள்ளன. மொத்தம் ரூ.3 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 300க்கு விற்றுள்ளது.

ஆக மொத்தம் ரூ. 10 கோடிக்கு விற்பனை
கடந்த ஆண்டை விட ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு விற்றது. 3 நாட்களும் சேர்ந்து மொத்தம் ரூ.10 கோடிக்கு மது பானங்கள் விற்பனை நடந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications