For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாய்க் கண்காட்சி.. விஜயகாந்த் வளர்க்கும் லண்டன் நாய்களும் பங்கேற்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நந்தனத்தில் நடைபெற இருக்கும் நாய்க்கண்காட்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் லண்டன் நாய்களும் கலந்து கொள்ள இருக்கின்றன.

சென்னை நந்தனத்தில் நாய் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. நாளை தொடங்கும் சர்வதேச அளவிலான இந்த நாய் கண் காட்சியில் 750 நாய்கள் பங்கேற்கின்றன.

இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல வகையான நாய்கள் போட்டியில் கலந்து கொண்டு திறன்களை வெளிப்படுத்துகின்றன.

12 நடுவர்கள் பங்கேற்பு:

கண்காட்சியில் வெளிநாட்டை சேர்ந்த 12 நடுவர்கள் பங்கேற்கிறார்கள். கண்காட்சியில் டாபர்மேன், கிரேட்டன், ஜெர்மன் ஷெப் பர்டு போன்ற நாய்களின் அணிவகுப்பு நடக்கிறது.

விஜயகாந்தின் நாய்கள்:

நாய் கண்காட்சியில் சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் நாய்களும் பங்கேற்கின்றன. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் நாய்களும் போட்டியில் கலந்து கொள்கின்றன. அவர் பராமரிக்கும் பலவகையான 10 க்கும் மேற்பட்ட நாய்கள் இதில் பங்கேற்கின்றன.

லண்டன் இறக்குமதி:

இதற்காக அவர் லண்டனில் இருந்து வாங்கிய 3 நாய்களும் வரவழைக்கப்பட்டன. அந்த நாய்கள் லண்டனில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தன.

விலை உயர்ந்த ரகங்கள்:

ஒரு சிகப்பு நாயும், 2 கருப்பு நாய்களும் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டன. விமானத்தில் பறந்து வந்த அந்த 3 நாய்களும் மிக விலை உயர்ந்த ரகத்தை சேர்ந்தவையாகும்.

விமானத்தில் வந்தவை:

ஒவ்வொரு நாயும் பல லட்சம் மதிப்புடையவை. இந்த நாய்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்ததும் கூண்டு வேன் ஒன்றில் அவற்றை ஏற்றி சென்றனர்.

சொகுசுப் பயணம்:

நாய்கள் பாதுகாப்பாக சொகுசாக பயணம் செய்வதை அங்கு இருந்த பயணிகள் பார்த்து வியப்படைந்தனர்.

கவர்னர் ரோசையா பரிசு:

இந்த நாய் கண்காட்சியை மெட்ராஸ் கேனைன் கிளப் நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் நாய்களுக்கு கவர்னர் ரோசையா பரிசு வழங்குகிறார்.

English summary
Chennai dog’s exhibition starts tomorrow. In this exhibition DMDK leader Vijayakanth’s dogs also participate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X