For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக (9)- தேமுதிக (14)- பாமக (8)- மதிமுக(6) போட்டியிடப் போகும் உத்தேச தொகுதிகள் இவைதான்..

By Mathi
|

சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு ஓரளவு முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான அணியில் இணைவது குறித்து தேமுதி, பாமக கட்சிகள் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் யாருக்கு எந்த தொகுதி? என்பதில் பெரும் இழுபறியே ஏற்பட்டது.

இதனால் கூட்டணியில் அந்த கட்சி நீடிக்குமா? இந்த கட்சி நீடிக்குமா? என்ற குழப்பமும் நீடித்து வந்தது. இந்நிலையில் பாரதிய ஜனதா பகீரத பிரயத்னம் மேற்கொண்டு ஒருவழியாக தொகுதிகளை இறுதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனடிப்படையில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

தேமுதிகவின் 14 தொகுதிகள்..

தேமுதிகவின் 14 தொகுதிகள்..

இதில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர், வடசென்னை, வேலூர், ஆரணி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், மதுரை, நெல்லை

பாஜகவின் 9 தொகுதிகள்

பாஜகவின் 9 தொகுதிகள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள்: தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி

பாமகவின் 8 தொகுதிகள்

பாமகவின் 8 தொகுதிகள்

பாமக போட்டியிடும் 8 தொகுதிகள்: அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், கடலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல்

மதிமுகவின் 6 தொகுதிகள்

மதிமுகவின் 6 தொகுதிகள்

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள்: மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி

என்.ஆர். காங்கிரஸுக்கு புதுவை

என்.ஆர். காங்கிரஸுக்கு புதுவை

அத்துடன் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர், ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பொள்ளாச்சி தொகுதியும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.

English summary
Sources said DMDK may get 14 seats including some PMK seats in BJP lead allinace for Lok sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X