ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து திமுகவினர் வெளியேறுவார்கள்.. மா.சுப்ரமணியன் அதிரடி

Subscribe to Oneindia Tamil
ரஜினி ரசிகர்மன்றத்தில் இருக்கும் திமுகவினர் வெளியேறுவார்கள்- மா.சுப்பிரமணியன்- வீடியோ

சென்னை: ரஜினி ரசிகர் கட்சி ஆரம்பித்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

நடிகர் ரஜினி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

அதற்கு முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் இருக்கும் தனது ரசிகர்களை மன்றத்தின் மூலம் ஒருங்கிணைக்கும்படி ரஜினி கேட்டுக்கொண்டு உள்ளார். இதற்கான பணிகள் துரித கதியில் நடக்கின்றன.

 வாக்குகளை பிரிப்பார்

வாக்குகளை பிரிப்பார்

ரஜினியின் இந்த அறிவிப்பால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் பல கட்சிகளிலும் இருந்து வந்த நிலையில், தனிக்கட்சி ஆரம்பிப்பதன் மூலம் பல்வேறு கட்சிகளின் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 கொள்கை வேறு, சினிமா வேறு

கொள்கை வேறு, சினிமா வேறு

இதுகுறித்து திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் கூறுகையில், ரஜினி ரசிகர்கள் திமுகவில் இருக்கலாம். ஆனால், எங்களை பொறுத்தவரை கொள்கை வேறு; சினிமா வேறு. என்பதை தொண்டர்கள் நன்கு அறிந்து உள்ளார்கள்.

 வெளியேறும் திமுகவினர்

வெளியேறும் திமுகவினர்

ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து இருப்பதன் மூலம், எங்கள் தொண்டர்கள் ரஜினி ரசிகர் மன்றங்களில் இருந்து வெளியேறுவார்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

 கராத்தே தியாகராஜன்

கராத்தே தியாகராஜன்

அதுபோல, ரஜினியின் அரசியல் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் கராத்தே தியாகராஜன், நான் தீவிர ரஜினி ரசிகன். இருந்தாலும் அரசியல் களத்தில் எனக்கு எனது கட்சி தான் முக்கியம். நான் எனது கட்சிக்கு தான் தேர்தலில் வாக்களிப்பேன். இதைத்தான் எந்த ஒரு உண்மையான தொண்டனும் செய்வான் என்று குறிப்பிட்டு உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Cadres will not stick to Rajini Fans club anymore says Ma.Subramaniyan. He also added that There is no Loss for DMK with Rajini Political Entry.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற