For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேமுதிக வரலையா.. ரைட்டு விடு... வலுவாக 35 தொகுதிகளில் போட்டியிடப் போகும் திமுக

|

சென்னை: தேமுதிகவுக்கும் இன்ன பிற கட்சிகளுக்கும் கேட்டை இழுத்து மூடி விட்டது திமுக. அதை விட முக்கியமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அது 35 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தேமுதிகவுக்காக இத்தனை நாட்கள் தேவுடு காத்து வந்த திமுக தற்போது அதை இனிமேலும் தொங்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டது.

மறுபக்கம் பாஜகவுடன் தேமுதிக கிட்டத்தட்ட தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதனால் திமுக தனது அடுத்த வேலையைப் பார்க்க தீவிரமாகி விட்டது.

இருக்கிற கட்சிகள் போதும்

இருக்கிற கட்சிகள் போதும்

தற்போது திமுக கூட்டணியல் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிகள் உள்ளிட்டவை உள்ளன. இதை வைத்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்தால் போதும் என்ற முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளாராம்.

தேசியக் கட்சிகள் இல்லாமல்

தேசியக் கட்சிகள் இல்லாமல்

அதை விட முக்கியமாக இதுவரை தேசியக் கட்சி ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துத்தான் திமுக தேர்தலைச் சந்தித்து வந்துள்ளது. ஆனால் தற்போது முதல் முறையாக, காங்கிரஸும் இ்ல்லாமல், பாஜகவும் இல்லாமல் தேர்தலை சந்திக்கப் போகிறது.

மார்ச் 3ம் தேதிக்குப் பிறகு எப்ப வேண்டுமானாலும்

மார்ச் 3ம் தேதிக்குப் பிறகு எப்ப வேண்டுமானாலும்

மார்ச் 3ம் தேதியுடன் திமுக தனது நேர்காணலை முடிக்கிறது. அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும்தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை அது வெளியிடும் என்று தெரிகிறது.

அதிமுக 40ன்னா. .நாம 35ல் நிற்போம்

அதிமுக 40ன்னா. .நாம 35ல் நிற்போம்

அதிமுக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் அது கடைசியில் 30 முதல் 35 தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்று தெரிகிறது. எனவே திமுகவும் 35 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

சூடாகும் களம்

சூடாகும் களம்

மொத்தத்தில் அதிமுகவுக்கு நிகராக கடும் பைட் கொடுக்கும் வகையில் திமுகவும் களம் காணத் தயாராகி வருவதால் தேர்தல் களம் சூடாகக் காணப்படுகிறது.

ஆமா இவங்க என்ன செய்வாங்க....

ஆமா இவங்க என்ன செய்வாங்க....

மறுபக்கம் காங்கிரஸ் கட்சி திராட்டில் விடப்பட்டு தெருவோரமாக உட்கார்ந்திருக்கிறது. தேமுதிக, பாஜகவோடு போய் ஐக்கியமாகி விடும். ஆனால் கூட்டணி தேறுமா என்பது தெரியவில்லை.. மொத்தத்தில் இந்த தேர்தல் திருவிழாவில் பல வித்தியாசமான காட்சிகளைக் காண முடியும் என்பது மட்டும் உறுதி.

English summary
DMK is planning to contest in 35 seats in forthcoming LS elections, it seems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X