அன்று கருணாநிதி மட்டும் இல்லைன்னா... ரஜினி மீது பாய்ந்த துரைமுருகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை முதலைகள் என நடிகர் ரஜினிகாந்த் கடுமையாக விமர்சித்திருப்பது அக்கட்சியை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அன்று நம்மால் தப்பிய ரஜினிகாந்த் இன்று பிழைப்புக்காக ஏதோ பாடுகிறார் என கடுமையாக தாக்கியிருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன்.

அரசியலுக்கு இதோ வருகிறேன்... அதோ வருகிறேன் என 30 ஆண்டுகாலமாக பூச்சாண்டி காட்டுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழலில் அவரை பயன்படுத்த பாஜக திட்டமிடுவதாக கூறப்பட்டது.

திடீர் ஞானோதயம்

திடீர் ஞானோதயம்

இந்நிலையில் திடீர் ஞானோதயம் பெற்றவராக தமது ரசிகர்களுடனான சந்திப்பில் 1996-ல் திமுக- தமாகா கூட்டணியை ஆதரித்தது ஒரு அரசியல் விபத்து என சாடினார் ரஜினி. அத்துடன் திமுகவை முதலைகள் எனவும் மறைமுகமாக சாடியிருந்தார் ரஜினி.

ஸ்டாலின் ஆலோசனை

ஸ்டாலின் ஆலோசனை

இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மூத்த தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது, மோடியின் ஊதுகுழலாகிவிட்டார் ரஜினிகாந்த். அவரது மிரட்டலுக்கு பயந்துதான் இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்.

வறுத்த துரைமுருகன்

வறுத்த துரைமுருகன்

அன்று ஜெயலலிதாவை எதிர்த்து தாக்கு பிடிக்காது; தொழில் முடங்கிப் போய்விடும் என அஞ்சி கோபாலபுரத்துக்கு ஓடிவந்தவர் ரஜினி. அன்று நாம் ஆதரிக்காமல் இருந்தால் அவரது நிலைமையே வேற.. இன்றும் பிழைப்புக்காக ஏதோ பாடுகிறார்.. பாடிவிட்டுப் போகட்டும் என போட்டு தாக்கியிருக்கிறார் துரைமுருகன்.

அப்புறம்தான் கச்சேரியாம்

அப்புறம்தான் கச்சேரியாம்

திமுகவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்தை எதிர்க்காமலும் கண்டு கொள்ளாமலும் கடந்து செல்வது என்பதுதான் இப்போதைய யுக்தியாம். ரஜினிகாந்த் வெளிப்படையாக வரும்போது கச்சேரி வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK top leaders very upset over the Super Star Rajinikanth's remarks.
Please Wait while comments are loading...