For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடை மிளகாய், துளை போடும் கருவி, அருவா, சங்கிலி... இவையெல்லாம் ஆர்கே நகர் வேட்பாளர்களின் சின்னங்கள்

ஆர் கே நகரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் மிகவும் சுவாரஸ்யமான சின்னங்களை வைத்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கே நகரில் களம் காணும் வேட்பாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

ஜெயலலிதா மறைந்த பிறகு இன்று ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி, சுயேட்சைகள் என 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Do you know what are the symbols of RK Nagar?

அவர்களில் வாக்கு பதிவு இயந்திரத்தில் முதலிடத்தில பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும், இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளரும், 3-ஆவது இடத்தில் அதிமுக வேட்பாளரும், 4-ஆவது இடத்தில் திமுக வேட்பாளரும் உள்ளனர்.

குக்கர் சின்னத்தில் போட்டியிடும் தினகரனுக்கு 33-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தினகரன் என்ற பெயரில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த முறை தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தில் ரமேஷ் என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார்.

சில சுவாரஸ்யமான சின்னங்களையும் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. அவற்றுள் காரமில்லாத குடை மிளகாய் சின்னம் சக்கரவர்த்தி என்ற வேட்பாளருக்கும், ஹெல்மெட் சின்னம் குணசேகர் என்ற வேட்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரிவாள் சின்னம் கோவிந்தசாமி என்ற வேட்பாளருக்கும், டிரில்லிங் மெஷின் (துளை போடும் கருவி) எம்.தினகரன் என்ற வேட்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து கேஸ் சிலிண்டர் சின்னம் அகமது ஷாஜஹானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

English summary
RK Nagar independent contestants are having interesting symbols.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X